குக்கு வித் கோமாளி சீசன் 4: குக்கு வித் கோமாளி தொடர்தான் தற்போது இளசுகள் முதல் அனைத்து தரப்பினருக்குமான முழு பொதுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கிறது. சமையல் நிகழ்ச்சியை புதுவிதமாக முயற்சித்து, அதனை தற்போது நான்காவது சீசன் வரை கொண்டு வந்திருப்பதன் மூலம், தொடரின் வெற்றியையும், வீச்சையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். அந்த தொடரில் சமையல்கலை வல்லுநர்களான செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் ஆகியோரின் கூர்மையான தீர்ப்புகள் முதல் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வரை அனைத்து அம்சங்களும் ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது என கூறலாம். சனி, ஞாயிறு தினங்களில் வரும் அந்த ஒருமணிநேர எபிசோட்களை பார்க்க தொலைக்காட்சியிலும், மொபைலிலும் அனைவரும் மூழ்கிவிடுவார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படி  ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது ஷெரின், விசித்ரா, ஸ்ருஷ்டி, மைம் கோபி என புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்துகொண்டு உள்ளனர். குறிப்பாக கடந்த சீசன் வரை கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி, இந்த சீசனில் குக்கு ஆக களமிறங்கி கலக்கி வருகிறார். இந்த சீசனில் இதுவரை 20 எபிசோட்கள் முடிந்துள்ளன. அதில் இதுவரை கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா ஆகிய 3 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். 


மேலும் படிக்க | பிரபல நடிகருக்கு தொடரும் கொலை மிரட்டல்... பாதுகாப்புக்கு வெளிநாட்டு கார் - என்ன ஸ்பெஷல்?


இந்த நிலையில் குக்கு வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து நான்காவதாக எலிமினேட் ஆகியிருக்கும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதன்படி இன்று இந்த நிகழ்ச்சியை விட்டு விஜே விஷால் வெளியேறியுள்ளார். இந்த தகவல் வெளியான முதல் அவரது ராசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இன்று நடைபெற்ற டாஸ்க் சிவாங்கி மற்றும் vj விஷால் ஆகிய இருவரும் சுமாராக சமைத்து இருந்தார்கள். இதனால் இவர்கள் இருவருக்கும் எலிமினேஷன் சேலஞ்ச் கொடுக்கப்பட்டது. இறுதியில் இருவருக்கும் டாஸ்க் சிவாங்கியை விட சுமாராக சமைத்த விஷால் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.


மேலும் படிக்க | எப்போது பார்த்தாலும் சலிக்காத டாப் 10 Sci-Fi படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ