இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மேனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், சாந்தனு என நடிகர் பட்டாளனே நடித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் நெய்வேலியில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்றது. அனிருத் இசையமைக்க அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகளை எழுதியிருந்தார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் நேற்று முன்தினம் மார்ச்  10 ஆம் தேதி “வாத்தி கம்மிங் ஒத்து” என்ற இரண்டாவது பாடல் வெளியானது. இந்தப் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வருகிறது. 


இந்நிலையில் “வாத்தி கம்மிங் ஒத்து”  பாடலுக்கு இசையமைப்பாளர் அனிரூத் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவானது  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அனிருத் தன் ஸ்டுடியோவில் இருந்து அதே நடனத்தை ஆடியுள்ளார், வீடியோ இதோ.,