இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியானது. ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் ரிலீஸான இந்தப் படம் முதல் நாளிலேயே மிகப்பெரிய ஒபனிங்கை பெற்றது. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க |  இங்கிலாந்தில் சாதனை படைத்த ’காத்து வாக்கு ரெண்டு காதல்’


அதேநேரத்தில் படம் ரிலிஸூக்குப் பிறகும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டது. படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டின. திரைக்கதை சரியாக இல்லை எனவும், மிகப்பெரிய ஸ்டாரான விஜயை இயக்குநர் நெல்சன் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை எனவும் விஜய்யின் அப்பா சந்திரசேகர் குற்றம்சாட்டினார். ரசிகர்களும் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், பீஸ்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை சன்பிக்சர்ஸ் அண்மையில் அறிவித்தது.



அதன்படி, சன்நெக்ஸ் மற்றும் நெட்பிளிக்ஸ் என இரண்டு ஒடிடி தளங்களில் ஒரே நேரத்தில் படம்  வெளியிடப்பட்டுள்ளது. சன்நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனங்கள் இதனை தங்கள் டிவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளன. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகளில் சாதனை படைத்ததுபோலவே, ஒடிடியிலும் சாதனை படைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதேபோல், விஜயின் புதிய லுக் இணையத்தில் வைரலாகியுள்ளது. இயக்குநர் வம்சி படத்தில் அவர் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துக் கொண்டிருக்கிறார். 


மேலும் படிக்க | ஷங்கரின் அடுத்த பட ஹீரோயின் இவர்தானாம்- கதையும் ‘லீக்’ ஆயிடுச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR