பாவனா திருமணம் எப்போது - தொடர் குழப்பத்தில் ரசிகர்கள்!
இரண்டு வருட காதலுக்கு பிறகு பாவனா, நவீன் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்
தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்ட மலையாள நடிகை பாவனா-விற்கு வரும் ஜனவரி 22-ல் திருமணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழில் பாவனா அறிமுகமானார், பின்னர் ஜெயம் கொண்டான், அசல், தீபாவளி போன்ற படங்கள் மூலம் கோலிவுட்டில் நிலையான இடம் பிடித்தார். பின்னர் மலையாள மொழிப் படங்களில் பிஸியானாதால் தமிழ் திரையுலகில் தனது விஜயத்தை குறைத்துக்கொண்டார்.
இவர் கன்னட படங்களில் நடித்தபோது கன்னட தயாரிப்பாளரும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருமான நவீனை காதலித்தார். இரண்டு வருட காதலுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நவீன் குடும்பத்தினர் பின்னர் ஒப்புக் கொண்டனர். இந்நிலையில் பாவனா வாழ்க்கையில் சில எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தது.
இந்த சம்பவங்களால் மனஉலச்சலுக்கு ஆளான அவரை சகஜநிலைக்கு கொண்டு வரும் முயற்சியாக இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடத்தப்பட்டது. டிசம்பர் மாதம் 22-ஆம் நாள் திருமணம் நடத்தவும் முடிவுசெய்யப்பட்டது.
ஆனால் சில காரணங்களால் திருமணம் தள்ளிப்போனது. இந்நிலையில் பாவனாவின் திருமணம் வருகிற ஜனவரி மாதம் 22-ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.