விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சினத்திரையில் அறிமுகமான புகழ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றார். ரம்யா பாண்டியனுடன் அவர் ஜோடி சேர்ந்து செய்த கலாட்டா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை செம ஹிட்டாக்கியது. முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து 2வது சீசனும் குக் வித் கோமாளி தொடங்கப்பட்டது.  இதிலும் கோமாளியாக கலந்து கொண்ட புகழ், பவித்ரா, தர்ஷாவிடம் செம ஜாலியாக இருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | நடிகர் அஜித்குமாரின் புதிய தோற்றத்தை வெளியிட்டார் போனிக்கபூர்


அவர் அடித்த லூட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவருடன் சேர்ந்து பாலா, ஷிவாங்கி, சுனிதா, மணிமேகலை ஆகியோரும் கோமாளிகளாக வந்து நிகழ்ச்சியை அமர்களப்படுத்தினர். இதனால், முதல் சீசன் குக் வித் கோமாளியைக் காட்டிலும், 2வது சீசன் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த ஷோவில் செம ஹைலைட்டாக இருந்த புகழுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது. அஜித்குமாரின் வலிமை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து.இந்நிலையில், திடீரென சமூகவலைதளங்களில் தனது காதலியை அறிமுகப்படுத்திய புகழ், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறினார். \



ஆனால், எப்போது திருமணம் செய்து கொள்வார்? என்ற தகவலை தெரிவிக்கவில்லை. இதனிடையே, குக்வித்கோமாளி 3வது சீசன் தொடங்கியது. படப்பிடிப்புகளில் பிஸியாகி இருந்த புகழ் இந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை. அவர் வருவாரா? என ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வந்த கேள்விக்கு அண்மையில் பதில் அளித்த ஷெஃப் தாமு, புகழ் நிகழ்ச்சி வருவார் எனக் கூறினார்.



அவர் கூறியது போலவே குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்துள்ள புகழ், காதலி குறித்து மனம் திறந்துள்ளார். அதில், "காதலியின் பெயர் பென்சி, நாங்கள் 5 வருடமாக காதலித்து வருகிறோம். அவர் கொடுத்த சுதந்திரத்தின் காரணமாக பவித்ரா உள்ளிட்டோரும் சகஜமாக பழகமுடிந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் இருவரும் திருமணம் செய்து கொள்வோம்" எனத் தெரிவித்தார்.


மேலும் படிக்க | இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR