யார் இந்த ரியா சிங்கா? மிஸ் யுனிவர்ஸ் 2024 இறுதிப் போட்டியில் இருந்து ஏன் வெளியேற்றப்பட்டார்
Who is this Rhea Singha: பிரபஞ்ச அழகி 2024 போட்டிக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரியா சிங்கா வெளியேற்றப்பட்டார். ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Miss Universe 2024: இந்தியாவில் சார்பாக மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் கலந்துக்கொண்ட ரியா சிங்கா இறுதிப் போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெறாமல் வெளியேறினார்.
மிஸ் யுனிவர்ஸ் 2024: ரியா சிங்கா வெளியேற்றம்
ரியா சிங்கா முதல் 12 இடங்களை பிடிக்கத் தவறியதால், பிரபஞ்ச அழகி 2024 போட்டிக்கான இந்தியாவின் நம்பிக்கை பொய்த்துப் போனது. அவர் முதல் 30 இடங்களை எட்டிய போதிலும், ஆரம்ப சுற்றுகளில் அசத்திய ரியா சிங்கா, ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை அளித்தார். ஆனால் அவரால் இறுதிச் சுற்றுக்கு செல்ல முடியவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மிஸ் யுனிவர்ஸ் 2024: இறுதிப் போட்டியாளர்கள் பட்டியல்
இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் 2024க்கான போட்டியில் 12 பேர் அடங்கிய இறுதிப் போட்டியாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. பொலிவியா, மெக்சிகோ, வெனிசுலா, அர்ஜென்டினா, புவேர்ட்டோ ரிக்கோ, நைஜீரியா, ரஷ்யா, சிலி, தாய்லாந்து, டென்மார்க், கனடா மற்றும் பெரு ஆகிய நாடுகளின் அழகிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த இறுதிப் போட்டியாளர்களில் ஏழு பேர் லத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள் எனப்து குறிப்பிடத்தக்கது.
73வது பிரபஞ்ச அழகி போட்டி
மெக்சிகோவில் நடைபெறவுள்ள 73வது பிரபஞ்ச அழகி போட்டிக்கான (Miss Universe 2024) 12 இறுதிப் போட்டியாளர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்திய நாடுகளின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் அற்புதமான அழகைப் பிரதிபலித்து தங்கள் இடத்தை தக்கவைத்து கொண்டனர்.
யார் இந்த ரியா சிங்கா?
ரியா சிங்க தனது 16வது வயதில் மாடலிங் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் மாடலாக இருப்பதுடன், TEDx பேச்சாளர், நடிகர் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர் ஆவார்.
ரியா சிங்கா எந்த மாநிலம்?
குஜராத்தைச் சேர்ந்த 19 வயதான ரியா சிங்கா, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 போட்டியில் பட்டம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை. ஆனால் அவர் ஏற்கனவே மிஸ் டீன் எர்த் 2023 மற்றும் திவாவின் மிஸ் டீன் குஜராத் 2020 ஆகிய படங்களை வென்றுள்ளார்.
மிஸ் டீன் யுனிவர்ஸ் 2023
ரியா சிங்கா, ஜிஎல்எஸ் பல்கலைக்கழகத்தில் கலைநிகழ்ச்சியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அகமதாபாத் மிஸ் டீன் யுனிவர்ஸ் 2023 போட்டியில் இந்தியாவுக்காகப் போட்டியிட்டு முதல் ஆறு இடங்களைப் பிடித்தார்.
மிஸ் யுனிவர்ஸ் 2024 மகுடம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 இறுதிப்போட்டி வெகு விமரிசையாக நடந்தது. அந்தப்போட்டியில், மொத்தம் 51 பேர் கலந்துக் கொண்டனர். 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இறுதி போட்டியில் 51 போட்டியாளர்களை தோற்கடித்து குஜராத்தைச் சேர்ந்த ரியா சிங்கா இந்தியாவாக மகுடம் சூட்டப்பட்டார்.
ரியா சிங்கா சொன்னது
அதைப்பற்றி ரியா சிங்கா அவர் கூறுகையில், "இன்று நான் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 மகுடம் சூட்டப்பட்டேன். நான் மிகவும் கடமை பட்டுள்ளேன். இந்த கிரீடத்திற்கு நான் தகுதியானவள் என்று கருதும் அளவுக்கு நான் இந்த நிலைக்கு வருவதற்கு நிறைய கஷ்டப்பட்டு உள்ளேன். தற்போது நான் மிகவும் உத்வேகமடைந்து உள்ளேன்" எனக் கூறினார்.
மேலும் படிக்க - கீர்த்தி சுரேஷிற்கு டிசம்பரில் திருமணம்?! 34 வயது இசையமைப்பாளர் மாப்பிள்ளையா?
மேலும் படிக்க | த்ரிஷாவிற்கு விரைவில் திருமணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
மேலும் படிக்க | தன்னை விட 10 வயது குறைந்த நடிகையை காதலிக்கும் சிம்பு?! யார் அந்த நடிகை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ