ச்சீ.. இப்படியா பண்ணுவீங்க? ஐஸ்வர்யா ராய் மகள் உடல்நிலை குறித்து மோசமாக பதிவிட்ட யூடியூப் சேனல்கள்!
Aaradhya Filed Case Against YouTube Channels: முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மகளின் உடல்நிலை குறித்து மோசமான செய்திகளை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
Aaradhya Bachchan Case: பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறந்த அமிதாப் பச்சனின் பேத்தியும், ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சனின் மகளுமான ஆராதயா பச்சன் குறித்து சில தினங்களுக்கு முன்பு சில யூடியூப் சேனல்கள் மிகவும் மோசமான வீடியோக்களை வெளியிட்டனர். அதில் ஆராதயா உடல்நிலை குறித்தும், அவருக்கு மோசமான நோய் இருப்பதாகவும் சொல்லியுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதோடு இதனால் ஐஸ்வர்யா ராய் தனது கணவரை பிரிந்துவிட்டதாகவும் அவர்கள் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
எல்லைமீறி இப்படி கேவலமான செயலில் ஈடுபட்ட யூடியூபர்களுக்கு எதிராக பல பிரபலங்களும் குரல் எழுப்பினர். இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினர் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளனர். 11 வயதாகும் ஆராதயா பச்சன் குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கை இன்று டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய உள்ளது.
மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் முதல் விடுதலை வரை! OTT ரிலீஸ் தேதி முழு விவரம்!
தொடர்ந்து ஆராதயாவை குறிவைத்து சில மீடியாக்கள் மோசமாக செயல்படுவதாக பலமுறை அபிஷேக் பச்சன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சூழலில் தற்போது ஆராதயா உடல்நிலை குறித்து பரவிய மோசமான செய்தியை அடுத்து, இது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நான் ஒரு செலிபிரிட்டி. என்னைப்பற்றி எதுவேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் என் மகளிடம் இருந்து தள்ளியே இருங்கள். உங்களுக்கு எதாவது சொல்ல வேண்டும் என்றால் என் முகத்தை பார்த்து சொல்லிங்கள் என காட்டமாக ட்ரோல் செய்தவர்களுக்கு செருப்படி கொடுத்துள்ளார் அபிஷேக் பச்சன்.
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சம் திருமணம் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஜோடிக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஆராதயா பிறந்தார். இதுவரை பலமுறை மீடியாக்கள் இந்த நட்சத்திர ஜோடிக்கு விவாகரத்து வாங்கி கொடுத்துவிட்டனர். எப்போதுமே இவர்கள் குறித்த பல வதந்திகள் வெளியாகும். ஆனால் இந்த முறை 12 வயதாகும் இவர்களின் மகள் குறித்து பரப்பப்பட்ட மோசமான செய்தி நிச்சயம் இந்த குடும்பத்தை மனதளவில் பாதித்திருக்கும். இப்படி அநாகரீகமாக செய்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் லிப்லாக் புகைப்படம்! அதுவும் யார்கூட தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ