கைது செய்யப்படுவாரா மன்சூர் அலிகான்? சம்மன் அனுப்பிய காவல்துறை!
Mansoor Ali Khan: நடிகை திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் சம்மணியில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி வில்லனாக நடித்து வருபவர் மன்சூர் அலிகான். இவர் சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா நடித்த லியோ படத்தில் இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்த மன்சூர் அலிகான், முன்பெல்லாம் திரைப்படங்களில் நடிகைகளை வில்லன் பாலியல் துன்புரத்தில் செய்யும் காட்சிகள் அதிகம் இருக்கும் இப்போது அது குறைவாகிவிட்டது. அதுவும் இந்த லியோ திரைப்படத்தில் திரிஷாவுடன் காட்சிகள் இருக்கும் என்று விரும்பினேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை என பேசி இருந்தார் இந்த பேச்சு சர்ச்சையாகியது.
மேலும் படிக்க | பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானாரா மன்சூர் அலிகான்? 1996-ல் நடந்தது என்ன?
இந்த நிலையில் இது குறித்து நடக்க திரிஷா தனது எக்ஸ் தளத்தில் மன்சூர் அலிகான் தன்னை பற்றி அருவருக்க தக்க வகையில் பேசும் வீடியோ ஒன்றை பார்த்தேன், இதனை வன்மையாக கண்டிக்கிறேன் பாலியல் ரீதியாகவும் ஆணாதிக்க மனநிலையும் பெண்களை அவமரியாதை செய்யும் விதமாகவும் பாலின வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும் மோசமாக இருக்கிறது. மேலும் அவர் என்னுடன் திரையில் நடிக்க விரும்பலாம் ஆனால் நான் இதுவரை இது போன்ற ஒரு நபருடன் நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு மேலும் எனது திரை வாழ்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். இவர்களை போன்றவர்களால் தான் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு அவள் பெயர் என தனது கன்னடங்களை பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சை குறை கருத்து தெரிவித்ததால் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து ஐபிசி பிரிவு 59(பி) என்ற சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியது. மேலும் இது தொடர்பாக கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மன்சூர் அலிகான் மீது 354a,(பெண்களை தரை குறைவாக பேசுதல்), 309 (இழிவாக பேசி தற்கொலைக்கு தூண்டுதல்) உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் இடம் விசாரணை நடத்துவதற்கு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் மன்சூர் அலிகானுக்கு அனுப்பி உள்ளனர். இதற்காக சென்னை ஆயிரம் எனக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் பெண் போலீசார் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மன்சூர் அலிகான் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளனர். அப்போது மன்சூர் அலிகான் வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் சம்மனை வழங்கியுள்ளனர். மேலும் அந்த சம்மனில் நாளை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | விசித்ரா பேசியது இந்த நடிகரை பற்றி தானா? வலுக்கும் கண்டனங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ