விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'.  நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியின் தொடர்ந்து விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  சமீபத்தில் இந்த படத்திற்கு நயன்தாரா தனது சொந்த குரலில் டப்பிங் பேசி முடித்த புகைப்படங்கள் வெளியானது.  மேலும் இப்படத்திலிருந்து வெளியான 'டூ டூ டூ டூ' பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Blue சட்டை : என்னய்யா பண்ணி வெச்சிருக்க? Anti-Indian Review


சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டான்' திரைப்படத்தில் சிவா கல்லூரி மாணவனாக நடித்துள்ளார், இப்படம் கல்லூரி சம்மந்தப்பட்ட கதையை மையமாக வைத்து நகர்கிறது.  இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் ரிலீசாவதாக தகவல் வெளியாகியுள்ளது.  அந்த மாதத்தில் காதலர் தினம் வருவதால் இளைஞர்களை  உற்சாகபடுத்தும் நோக்கில் இப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வசூல் செய்தது.  இதே எதிர்பார்ப்பு தற்போது டான் படத்தின் மீதும் உள்ளது.  விஜய்சேதுபதியின் சமீபத்திய படங்கள் பெரிதாக ஓடாததால் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை நம்பி தற்போது உள்ளார்.


ALSO READ இந்த மாதம் திரையரங்கில் வெளியாகும் முக்கிய படங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR