காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று திருமணம் செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகிபாபு. இவருக்கு எப்போது திருமணம் என பலரும் கேட்டு வந்தார்கள். திருமணத் தகவலை நானே அறிவிப்பேன் என்று கூறினார்.


இந்நிலையில் நடிகர் யோகி பாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் நடைபெற்றது. வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.