நயன்தாராவுடன் நடிக்கும் யூட்யூப் ஸ்டார் ரித்து!
நயன்தாரா நடிக்கும் புதிய படமொன்றில் யூடியூபில் பிரபலமாகிய குழந்தை நட்சத்திரமான ரித்விக் என்கிற சிறுவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுமுக இயக்குனரும், வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விக்னேஷ் என்பவர் நயன்தாராவை வைத்து 'ஆக்சிஜன்(O2)' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாரக உள்ளது.
ALSO READ | தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகும் 'வலிமை'!
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு மக்களை கவர்ந்த ரித்விக் என்ற சிறுவன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல வகையான வேடங்களையிட்டு சிறப்பாக நடித்துவரும் இந்த குழந்தை பையனா அல்லது பெண்ணா என்று பலரும் சந்தேகிக்கும் வகையில் இந்த சிறுவனது நடிப்பு இருக்கும்.
இந்த சிறுவன் பலவிதமான கெட்டப்பில் வெளியிடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த சிறுவன் நயன்தாராவின் 'ஆக்சிஜன்(O2)' நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானதில், சிறுவனின் நடிப்பை பார்க்க பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே 'இமைக்கா நொடிகள்' படத்தில் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகளான மானஸ்வி, நயன்தாராவுடன் நடித்ததன் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படம் நேரடியாக OTT-ல் ரிலீசாக போவதாக கூறப்பட்டுள்ளது. நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் ஆகிய படங்கள் நேரடியாக OTT-ல் ரிலீசாகி வெற்றி பெற்றிருந்த நிலையில் இப்படமும் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | தனுஷை வைத்து இயக்கும் ராக்கி பட இயக்குனர் அருண்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR