ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அதன்படி அண்மையில் தொடங்கபிபட்ட சீரியல் தான் "அண்ணா". இந்த சீரியலில் பரணி ஷாக் அடித்த சண்முகத்துக்கு உதட்டோடு உதடு வைத்து  மூச்சு கொடுத்து காப்பாற்றிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்ணா: இன்றைய எபிசோட்


அதாவது சண்முகத்தின் தங்கைகள் எல்லோரும் அண்ணன் கண் விழித்து விட்டார் என்ற சந்தோசத்தில் இதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால் சௌந்தரபாண்டியனும் மாப்பிள்ளை வீட்டாரும் உச்சகட்ட கோபத்தில் இருக்கின்றனர். இருந்த போதிலும் கோபத்தை காட்டாமல் இருக்கின்றனர். 


இதையடுத்து சண்முகம் வீட்டுக்கு வந்ததும் தமிழரசி வீட்டுக்கு வந்து உனக்கு எப்படி அவ முத்தம் கொடுக்கலாம் என சண்டை போடுகிறாள். ஆனால் சண்முகம் பரணி தனக்காக மூச்சு கொடுத்து உயிரை காப்பாற்றிய விஷயத்தை எல்லாம் நினைத்து சந்தோஷப்படுகிறான்.   


மறுபக்கம் சௌந்தரபாண்டி பரணியிடம் உன்னை டாக்டருக்கு படிக்க வச்சது என்னுடைய கௌரவத்துக்காக தான், கண்டவனுக்கெல்லாம் இப்படி முத்தம் கொடுத்து உயிரை காப்பாற்றுவதற்கு இல்லை என கண்டபடி பேசுகிறார். இப்ப நான் மாப்பிள்ளை வீட்டாரை எப்படி நான் சமாதானப்படுத்துவேன் என சத்தம் போட பாக்கியம் தயக்கத்தோடு பரணிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என சொல்கிறாள். 


மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: கைதாகும் சூர்யா.. அதிர்ச்சியில் சீதா, ஆட்டத்தை தொடங்கும் மகா!!


இதனால் இன்னும் கோபமாகும் சௌந்தர பாண்டி ஓ டாக்டருக்கு படிச்சதனால டாக்டர் மாப்பிள்ளை தான் வேணுமோ? பாத்திர கடைகாரன் எல்லாம் கட்டிக்க கூடாதா என திட்டிவிட்டு உனக்கு அந்த மளிகைக்காரன் தான் சரியான ஆளு, அவனையே கட்டிக்கிட்டு அவனோட சேர்ந்து கடையில பொட்டலம் போடு என சத்தம் போடுகிறார். 


மேலும் தன்னுடைய மகன் சிவபாலனை கூப்பிட்டு சண்முகத்தை என்னை வந்து பார்க்க சொல்லு, உடனடியாக கல்யாணம் பண்ணனும் என சொல்லி அனுப்ப பரணி அதிர்ச்சி அடைகிறாள். 


இங்கே சண்முகம் வீட்டுக்கு வரும் சிவ பாலன் இசக்கியிடம் பலகாரம் கொடுத்தாங்க என கொடுத்துவிட்டு சண்முகத்திடம் உங்கள அப்பா சாயங்காலம் வீட்டுக்கு வர சொன்னாரு என்று சொல்ல அவன் என்ன விஷயம் என்று கேட்க பரணியோட கல்யாண விஷயமா பேசணும்னு சொன்னாரு என்று சொல்கிறான். 



அதை எதுக்கு என்கிட்ட பேசணும் என சண்முகம் கேட்க மாப்பிள்ளை நீதானே என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு சிவபாலன் அங்கிருந்து கிளம்பியதும் தங்கைகள் எல்லோரும் சண்முகத்தை கலாய்க்க இதெல்லாம் சரி வராதுலே என சண்முகம் சொல்லி சமாளிக்கிறான். 


இருந்தாலும் தனக்குள் காதலை வைத்துக்கொண்டு சண்முகம் வீட்டை விட்டு வெளியேற தங்கைகள் ஏற்கனவே இந்த வீட்டுல நாலு பொம்பளைங்க இப்போ அஞ்சாவது ஒரு பொம்பள வர போறாங்க என்று சொல்ல சண்முகம் சந்தோஷப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள். மிகவும் விறுவிறுப்பாக, பல டிவிஸ்டகல் கொண்ட இந்த சீரியலை மறக்காம மிஸ் பண்ணாம பாருங்கள் நேயர்களே ...!


மேலும் படிக்க |  தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ