ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  தமிழ் தொலைக்காட்சிகளின் பிரபலமான தொடர்களுள் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கருவாகும். தமிழ் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சின்னத்திரை பிரபலங்களான மோக்‌ஷிதா பாய், ஸ்ரீரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | “நெருப்புடா..” மலேசிய பிரதமரை சந்தித்த ரஜினிகாந்த்! என்ன காரணம்..?



இதற்கு முன்னதாக, தொடர் கடந்த சில எபிசோடுகளாக பல விருவிருப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வரும் முக்கிய கதாப்பாத்திரமான ரோஹித் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாக காண்பிக்கப்பட்டிருந்தது. மீனாட்சி வீட்டில் ரோஹித் உயிருடன் இருப்பது தெரிய வருகிறது. தன்னுடைய மனைவியே தன்னை கொலை செய்ய முயற்சி செய்த விஷயத்தை சொல்லி சொல்லி அவன் கலங்கி அழ மீனாட்சி அவனுக்கு ஆறுதல் கூறுகிறாள். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பூஜாவுக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்து தீர்ப்பு வழங்க ரோஹித் என்ட்ரி கொடுத்தான். இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் ரோகித், பூஜா ரங்கநாயகியின் வீட்டிற்கு வர, ரோகித்தைப் பார்த்து ரங்கநாயகி சந்தோஷப்படுகிறாள். தன்னை பூஜா கொல்லவில்லை என்று ரோகித் சொல்ல, பூஜாவின் மீது வீண்பழி சுமத்தியதற்காக சக்தியை ரங்கநாயகி திட்டுகிறாள். 


பிறகு பூஜாவை ரோகித் கொல்வது போல் கனவு கண்டு பூஜா பயத்தில் இருக்க, சக்தி வந்து பூஜாவிடம் ரோகித் உன்னை கொல்வதாக கனவு கண்டாயா எனக் கேட்க பூஜாவுக்கு பயம் அதிகமாக தூரத்தில் இருந்து ரோகித் பூஜாவை கோவத்துடன் பார்க்க, பூஜா ஓடிப்போய் ரூமில் மறைந்து கொள்கிறாள்.  அடுத்ததாக ரோகித் பூஜாவை காரில் ஏற்றிக் கொண்டு போகிறான் திடீரென ரோகித் துப்பாக்கி எடுத்துக்காட்ட பூஜா பயத்தில் இருக்க, நான் ஐ லவ் யூ சொல்லி விட்டேன். நீ ஏன் ஐ லவ் யூ சொல்லவில்லை என்று விளையாட்டாக பேச பூஜா ரோகித்தை புரியாமல் பார்க்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | மறக்காது கோபால்... ஏ.ஆர் ரஹ்மான் மறக்குமா நெஞ்சம் கச்சேரியை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ