அபிஷேக் சாவ்பே இயக்கியுள்ள `உட்தா பஞ்சாப்` திரைப்படம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.  பஞ்சாப் மாநிலம் போதை மருந்து வசம் சிக்கியுள்ளது பற்றி விரிவாகச் சித்திரப்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் 89 இடங்களில் கத்தரி போட வேண்டுமென்று சென்சார் வாரியம் முடிவெடுத்துள்ளது. மேலும் படத்தின் தலைப்பிலிருந்து ‘பஞ்சாப்’ என்ற வாரத்தையை அகற்றவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப்,  சென்சார் வாரியத்தின் தலைவர் நிஹலானி ‘சர்வாதிகாரி’ போல் செயல்படுகிறார் என்று கூறியுள்ளர். தயாரிப்பாளர்கள் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். 


ஆனால் சென்சார் வாரியத் தலைவர் நிஹலானியோ கூறியதாவது:- `உட்தா பஞ்சாப்` படத்தை வெளியிடுவது தொடர்பாக பஞ்சாப் அரசு தனக்கு எவ்வித நெருக்கடியையும் கொடுக்கவில்லை என்றும், 
ஆம் ஆத்மியிடம் பணம் பெற்றுக் கொண்டு அனுராக் காஷ்யப் பஞ்சாப் மாநிலத்தை மோசமாக சித்தரித்துள்ளார் என்று கூறியுள்ளார்.


இன்று இப்படத்தை பற்றிய தீர்ப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.