முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று நிதாஸ் கோப்பையை வென்றுள்ளது. இதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மிகவும் அதிரடியாக விளையாடினார். இந்த போட்டி மூலம் தமிழக வீரர் தினேஷ் கார்த்தி கிரிக்கெட் உலகில் பிரபலமாகி ஆகியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியில் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஒன்றாகவே சேர்ந்தார்கள். 2004 செப்டம்பர் மாதம் தினேஷ் கார்த்திக் அணியில் இணைந்தார். அதே சமயம் தோனி டிசம்பர் மாதம் அணியில் இணைந்தார். 


தோனிக்கு கேப்டன் பதவி கொடுபதற்க்கு முன்பு தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டது. இந்திய அணி கங்குலி, டிராவிட் இல்லாத சமயத்தில் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமிக்கலாம் என்று கிரேக் சாப்பல் கூறியிருந்த நிலையில் கடைசியில் அந்த வாய்ப்பு கேப்டன் வாய்ப்பு தோனிக்கு கிடைத்தது.


இந்த நிலையில் முத்தரப்பு தொடர் பின் தோனி பெரியவரா, தினேஷ் கார்த்திக் பெரியவரா என்ற விவாததிற்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக்,


எப்போதும் தோனி தான் பெரியவர். ''நான் படித்த பள்ளியில் அவர்தான் டாப்பர், அவர்தான் ஹெட் மாஸ்டர் என்று கூட சொல்லலாம். அவருக்கு என்னைவிட நிறைய அனுபவம் இருக்கிறது. என்றுள்ளார்.