தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நக்மா திடீரென அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நக்மாக்கு பதில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலராக, நடிகை நக்மாவை நியமித்ததும், அவருக்கு தமிழகம், புதுச்சேரி என, இரு மாநிலங்களின் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இரு மாநிலங்களில், புதுச்சேரி மகளிர் காங்கிரசாரிடம் மட்டுமே நக்மா இணக்கமாக இருந்து வந்தார். தற்போது நக்மாவை அந்த பதவியில் இருந்து விலக்கி இருக்கிறது காங்கிரஸ் மேலிடம். 


இதையடுத்து, நக்மாவிற்கு ஜம்மு - காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நீடிப்பார் என காங்கிரஸ் கட்சி தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.