காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள் அன்று (மார்ச் 26) மீண்டும் நமோ பயன்பாட்டை குறித்து, நரேந்திர மோடி தாக்கி பேசி உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமா் நரேந்தர மோடியுடன் மக்கள் தங்கள் கருத்துகளை கூறவும், பகிர்ந்துகொள்ளவும் "நமோ" என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த செயலியை குறித்து பிரான்ஸ் இணையத் தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எலியாட் ஆல்டர்சன் தந்து ட்விட்டர் பக்கத்தில், இந்த செயலில் இடம்பெற்றுள்ள உங்கள் தகவல்கள் அமெரிக்காவில் உள்ள கிளவா் டாப் என்ற நிறுவனத்துடன் பகிரப்படுவதாக குற்றச்சாட்டை கூறினார்.


இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:


“ஹாய். என் பெயா் நரேந்திர மோடி. நான் இந்தியாவின் பிரதமா். எனது செயலியை நீங்கள் பயன்படுத்தினால் உங்களது அனைத்து தகவல்களையும், உங்களின் அனுமதியில்லாமல், அமெரிக்க நிறுவனங்களில் உள்ள எனது நண்பா்களுக்கு வழங்குவேன்” என்று கூறியுள்ளார்.


 



 


 



 


 



 


கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் இருந்து தகவல் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.