ஐம்பது வயதைக் கடந்தாலும் இளமை மாறாமல் இருந்து வரும் விக்ரமிற்கு, ட்வீட்டில் பிறந்த நாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகராகத் திரையுலகில் நுழைந்து பின்னணிப் பாடகர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களும் எடுத்த சீயான் விக்ரமுக்கு இன்று பிறந்தநாள்.


தனது அசராத உழைப்பினால் நல்ல நடிகர் எனும் பெயர் பெற்றிருப்பதுதான் அவரது வாழ்நாள் சாதனையாகும்.


கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான ''என் காதல் கண்மணி'' என்னும் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகம் ஆனார். பின்னர், தன்னுடைய நடிப்புத்திறனால் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஓர் இடம் பெற்றுக் கொண்டார்.


இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் திரைப்படம் இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது.


இவர் இந்திய திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம் பேர் விருதுகள் பெற்றுள்ளார். 


அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ்நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். 


இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.