ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து இன்று மற்றும் நாளை என இரண்டு நாள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் ரூ.20000 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் பாத்தித்துள்ளதாக வர்த்தக நிறுவனம் Assocham தெரிவித்துள்ளது.


கடந்த வங்கி இறுதி கணக்கின் போது, முதன்மை நிலசுவாதர்கள் அதிக அளவில் கடன் வைத்திருந்தை அடுத்து சுமார் 50000 கோடி இழப்பு வங்கிகளுக்கு ஏற்பட்டது. அந்த நிகழ்வினை அடுத்து தற்போது சுமார் 19000 கோடி ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.


முன்னதாக கடந்த 5-ஆம் தேதி மும்பையில், வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கங்களுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவராத்தையில், வருவாய் அடிப்படையில் ஊழியர்களுக்கு சராசரியாக 2% அளவிற்கு ஊதிய உயர்வு வழங்க அரசு முன் வந்தது. 


ஆனால், இந்த ஊதிய உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கி ஊழியர்கள் மற்ற பல அரசு துறைகளை ஒப்பிடுகையில் தங்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஊதிய உயர்வினை வருவாய் அடிப்படையினில் உயர்த்தாமல், வேலைசுமையின் அடிப்படையில் உயர்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 


இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு 48 மணிநேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 


அதன்படி இன்று மற்றும் நாளை என நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்களுடன் தனியார் மற்றும் பன்னாட்டு வங்கி ஊழியர்கள் இணைந்து வேலை நிறுத்தத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்ககது!