நீட்: அடுத்தடுத்து சோகம்!! திருச்சி மாணவி தற்கொலை!
நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 40% மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி அடைய முடியாமல் தங்களது மருத்து படிப்பு கனவு பாழான நிலையில் மாணவ, மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் இந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த செஞ்சி பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது இதேபோல் திருச்சி மாணவி சுபஸ்ரீ நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிளஸ் டூ தேர்வில் 907 மதிப்பெண்கள் எடுத்திருந்த சுபஸ்ரீ நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். தற்போது இது குறித்து திருச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.