சிகரெட், புகையிலை பயன்படுத்துவோருக்கு அதன் பழக்கத்தில் இருந்து விடுபட அவற்றின் அட்டையில் எச்சரிக்கை படம்த்துடன் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் இடம்பெற வேண்டும் என சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிகரெட், புகையிலை பழக்கத்தால் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி இறப்பவர்கள் அதிகம். இதை தடுக்கஅந்த அட்டை பெட்டியில் எச்சரிக்கை படம் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். 


இதையடுத்து, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபட அவற்றின் அட்டையில் எச்சரிக்கை படத்துடன்மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் இடம்பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சிகரெட், புகையிலை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றனர்.  


இவர்களுக்கு உதவும் வகையில் அவற்றின் அட்டை பெட்டிகளில் 1800-11-2356க்கு என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கட்டாயம் அச்சிடப்பட வேண்டும். இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால், சிகரெட், புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் அவர்களுக்கு அளிக்கப்படும். வரும் செப்டம்பர் 1 முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன என சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.