வீட்டில் கழிவறை இல்லாத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என உ.பி சித்தப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலம் சித்தப்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் அரசு ஊழியர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது அரசு ஊழியர்கள் அனைவரது வீட்டிலும் கழிவறை இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு இந்த மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படமாட்டாது. கழிவறை இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு, தங்கள் வீட்டில் இருக்கும் கழிவறையை புகைப்படம் எடுத்து, அத்துடன் கழிப்பறை கட்டியதற்கான அடையாள சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும். 


இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனில் கண்டிப்பாக ஊதியம் கொடுக்கப்பட மாட்டாது, அடையாள சான்றை சமர்பித்த பிறகே சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பிரதமர் மோடியின் ஸ்வச் பாரத் அபியான் (Swachh Bharat Abhiyan) என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


கடந்த பிப்ரவரி 8ம் தேதி கணக்கின்படி, 11 மாநிலங்கள் முழுவதுமாக திறந்த வெளி கழிப்பிடமற்ற மாநிலங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.