அடுத்து 2 ஆண்டுகளுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக அளவில் இலக்கியப் படைப்புக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் முதன்மையானதாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு கருதப்படுகிறது. இந்த பரிசை அறிவிக்கும் ஸ்வீடிஷ் அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினர் காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் அவர்கள் மீது பாலியல் புகார் எழுந்ததால், இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய நோபல் பரிசு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.


இந்த ஆண்டின் மே மாதம் 3-ஆம் நாள் அறிவிக்கப்பட்ட இலக்கியத்திற்கான நோபல் பரிசும் இந்த ஆண்டு வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டிற்கான நோபல் பரிசினை அடுத்த ஆண்டுக்கான பரிசுடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தேர்வுக் குழுவிலிருந்த உறுப்பினர்கள் பலர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினர். 


இந்நிலையில் அடுத்த ஆண்டு மட்டுமின்றி அதற்கடுத்தாண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது கேள்விக் குறியாகியுள்ளது. இது குறித்து நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் தெரிவிக்கையில்... "தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு வழங்குவது சாத்தியமில்லை" என்று அறிவித்துள்ளார்!