துபாய் கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு Esaad சலுகை கார்டு
துபாயில் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், Esaad சலுகை அட்டையைப் பெறலாம். அதில் பல பிரத்தியேகமான தள்ளுபடி ஆபர்கள் வழங்கப்படுகிறது.
கோல்டன் விசா (Golden Visa ) என்பது வெளிநாட்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு அரசு வழங்கும் ஒரு கௌரவம். முதலீட்டாளர்கள், அறிவியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள், தொழில் முனைவோர், திறன்மிக்க மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள், சேவை துறையில் உள்ளவர்கள் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கவுரவிக்கிறது. துபாயில் இதுவரை 65,000 பேருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துபாயில் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், Esaad சலுகை அட்டையைப் பெறலாம். அதில் பல பிரத்தியேகமான தள்ளுபடி ஆபர்கள் வழங்கப்படுகிறது. துபாய் காவல்துறையின் ஈசாத் கார்டு கமிட்டியின் தலைவர் மோனா முகமது அல் அம்ரி இது குறித்து கூறுகையில், தேவையான விவரங்களை கோடிட்டுக் காட்டும் குறுஞ்செய்தி (SMS) மூலம் கோல்டன் விசா வைத்திருப்பவர்களுடன் கார்டு பகிரப்படும் என்றார்.
மேலும் படிக்க | UAE: மனித நேயத்திற்கான Golden Visa பெற்ற முதல் தமிழர்
Esaad அட்டை என்பது துபாய் காவல்துறையால் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது சுகாதாரம், கல்வி, விருந்தோம்பல், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் மற்றும் உணவகங்கள் உட்பட பல துறைகளில் சேவை மற்றும் பொருட்களுக்கு அசத்தலான ஆபர்களையும் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 7,237 பிராண்டுகள் மற்றும் வணிகங்கள் மற்றும் உலகளவில் 92 நாடுகளில் உள்ள கார்டுதாரர்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன.
மேலும் படிக்க | UAE: தொழிலாளர் ஊதிய பிரச்சனைகளை தீர்க்க மனித வள மேம்பாட்டு அமைச்சக தலைமையில் குழு
கோல்டன் விசா என்பது 10 ஆண்டுகாலம் செல்லுபடி ஆகக் கூடிய விசா. இதன் மூலம் ரெசிடென்ஸ் விசாவும் பெறலாம். 10 ஆண்டுகாலம் முடிந்த பின்னர் இதனை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
தமிழ் நடிகை த்ரிஷா, நடிகர் கமலஹாசன், பார்த்திபன் ஆகியோருக்கு கோல்டன் விசா கிடைத்துள்ளது. அது மட்டுமல்ல இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க | இந்தியாவுக்கான பயணத்தடையை நீக்கியது சவூதி அரேபியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ