Dubai: லாட்டரியில் ₹20 கோடி வென்ற இந்தியர்
துபாயில் நடந்த குலுக்கல் போட்டி ஒன்றில், இந்தியாவைச் சேர்ந்த அனிஷ் என்பவர் 10 மில்லியன் திர்ஹம், அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 21 கோடி ரூபாய் வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் முக்கியமான நாடாக விளங்குவது துபாய். அங்கே, அதிக அளவில் இந்தியர் வசிப்பது தெரிந்ததே. அதிலும் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்நாட்டின் முக்கிய வர்த்தக துறைகளான கட்டுமானம், சுற்றுலா, ஹோட்டல் மற்றும் ரியல் ஸ்டேட் ஆகிய துறைகளில், பெரிய பதவிகளிலும், தொழிலாளர் நிலைகளிலும் அதிக அளவில் இந்தியர்கள் பணிபுரிகின்றனர்.
துபாயில், லாட்டரி மற்றும் குலுக்கல் போட்டிகள் வழக்கமாக நடைபெறும். அந்த வகையில், சமீபத்தில் நடந்த லாட்டரி போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த அனிஷ் என்பவர் அனிஷ் என்பவர் 10 மில்லியன் திர்ஹம் வென்றுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் கூறுவதென்றால், சுமார் 21 கோடியாகும். குலுக்கலில் வென்றதை நம்பவே முடியவில்லை என கூறும் ஆனிஷ், தன்னிடம் கார் இல்லை என்பதால், இந்த பணத்தை வைத்து தான் முதலில் வாங்கப்போவது ஒரு கார் தான் என குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | துபாயில் ராபிள் குலுக்கல் போட்டியில் ரூ.7.5 கோடி வென்ற இந்தியர்
அஜ்மானில் வசிக்கும் அனிஷ் தனது பணியிடத்திற்கு செல்ல மூன்று மணிநேரம் செலவிடுகிறார். எனவே கார் வாங்குவது அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார். மேலும், குலுக்கலில் கிடைத்த பரிசுத் தொகை மூலம் தனது கடன்களை அடைத்து விட்டு நிம்மதியாக வாழ திட்டமிட்டுள்ளார்.
கடனைத் திருப்பிச் செலுத்தவும், தேவைப்படும் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவவும் பரிசுத் தொகையை பயன்படுத்துவேன் எனக் கூறும் ஆனிஷ் தனது குடும்பத்தினரை இங்கு அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளார்.
மேலும் படிக்க | அபுதாபி வாழ் தமிழர்களே அலர்ட்: இன்று முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G