இலங்கையில் கடும் நெருக்கடி; வங்கிகளின் வெளிநாடு நாணய இருப்பை கைப்பற்றும் அரசு!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், வங்கிகளில் இருந்து வெளிநாட்டு நாணய கையிருப்பை இலங்கை அரசு கைப்பற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், வங்கிகளில் இருந்து வெளிநாட்டு நாணய கையிருப்பை இலங்கை அரசு கைப்பற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இலங்கையில் சில காலங்களாகவே கடுமையான பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு வரும் நிலையில், கடுமையான மின்வெட்டு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், இலங்கை நாட்டு மக்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் உணவு பற்றாக்குறையால் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இலங்கை எரிபொருள் விலை உச்சம் தொட்டுள்ளது. அதோடு பற்றாக்குறை அதிகம் நிலவுவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் செவ்வாய்க்கிழமை இலங்கை படையினரை பணியில் அமர்த்தியுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ரஷ்யா அணு ஆயுத போரை நோக்கி செல்கிறதா?
ஏறக்குறைய ஒரு வருடமாக கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கையில். பெட்ரோல் வாங்க வரிசையில் நின்ற இருவர் உயிரிழக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இது வரை பெட்ரோல் வாங்க வரிசையில் நின்ற முதியவர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நாட்டின் அந்நியச் செலாவணி நெருக்கடி, பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோலியம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அண்டை நாட்டில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிலைமை வெடிக்கும் அளவிற்கு மாறியுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது, மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவிக்கின்றனர். நாட்டில் எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதுடன், இதனால் மக்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | அணு ஆயுதத்தை பயன்படுத்த விரும்பவில்லை... ஆனால்... எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா
இலங்கையின் நிதி நெருக்கடியானது கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. வர்த்தகர்கள் இறக்குமதி செய்ய இயலாமல் தவிக்கின்றனர். நாட்டின் சுற்றுலாத் துறை அன்னியச் செலாவணியின் முதன்மை ஆதாரமாக இருந்து வருகிறது, ஆனால் இதுவும் கோவிட் தொற்றுநோய் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டது.
இது தவிர, சிறந்த உட்கட்டமைப்பு, அதிக வேலைவாய்ப்பு, வருமானம், பொருளாதார ஸ்திரத்தன்மை போன்ற ஆதாயங்கள் கிடைக்கும் என, சீன வெளிநாட்டு முதலீட்டுக்கு இலங்கை அடிபணிந்தது. சீனா அதிக அளவில் கடன் கொடுப்பதற்கான, மறைமுக நோக்கங்கள் பற்றிய பலமுறை எச்சரிக்கைகள் விடுப்க்கப்பட்டும், இலங்கை அதனை புறக்கணித்தது. கடனில் சிக்கியுள்ள இலங்கையின் நிலைமை மோசமடைந்து வருவதற்கு இதுவே காரணம்.
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR