EPFO for NRI: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான முக்கிய செய்தி, எக்கச்சக்க பயன்கள்
EPFO for NRI: வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியரா நீங்கள்? ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் உங்களுக்கு அளிக்கப்படும் இந்த முக்கியமான வசதிகளை பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது மிக அவசியமாகும்.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க் பிரான்ஸ், லக்சம்பர்க், தென் கொரியா மற்றும் பிற நாடுகளை உள்ளடக்கிய 19 நாடுகளுடன் சமூக பாதுகாப்பு ஒப்பந்தம், அதாவது எஸ்எஸ்ஏ-ஐக் கொண்டுள்ளது. சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் என்பது இந்தியாவிற்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் ஆகும். இது மற்றொரு நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு கவரேஜ் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. எஸ்எஸ்ஏ என்பது எல்லை தாண்டி பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தமாகும்.
ஊழியர் எந்த நாட்டை சேர்ந்தவரோ, அந்த நாட்டை சேர்ந்த ஊழியர்களும், எந்த நாட்டில் பணிபுரிகிறார்களோ அந்த நாட்டு ஊழியர்களும், சமூகப் பாதுகாப்பின் அடிப்படையில் சமமாக நடத்தப்படுவதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது. இந்த ஒப்பந்தம் 'இரட்டை கவரேஜ்' -ஐ தவிர்க்கிறது. ஊழியர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது.
இந்த ஒப்பந்தம் ஒரு பரஸ்பர ஏற்பாடாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பொதுவாக இரட்டை கவரேஜைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்படுகின்றன. இந்தியா 19 எஸ்எஸ்ஏக்களை செயல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | EPFO விதிகளில் மாற்றம்: நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்
எஸ்எஸ்ஏ-இன் கீழ் உள்ள ஏற்பாடுகள்:
தங்கள் தாய் நாட்டுடன் சமூகப் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் கொண்ட நாட்டில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ள சர்வதேசத் தொழிலாளர்கள், தாங்கள் பணிபுரியும் நாட்டில் சமூகப் பாதுகாப்பு செயல்முறைக்கு பங்களிக்க வேண்டாம். ஆனால், அப்படி செய்யாமல் இருக்க, அவர்கள் தங்கள் சொந்த நாட்டில், சமூக பாதுகாப்பு செயல்முறைக்கு பங்களித்துக்கொண்டிருக்க வெண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பென்ஷன் எக்ஸ்போர்டபிளிடி:
சொந்த நாட்டில் வசிக்கத் தேர்ந்தெடுக்கும் பயனாளிக்கும், அந்தந்த எஸ்எஸ்ஏ-வில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி மூன்றாம் நாட்டில் வசிக்கத் தேர்ந்தெடுக்கும் பயனாளிக்கும் எந்தக் கழிப்பும் இல்லாமல் நேரடியாக ஓய்வூதியப் பலன்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள்.
பலன்களின் மொத்தமாக்கல்:
எஸ்எஸ்ஏ நாட்டில் வழங்கப்படும் சேவை, இந்தியாவில் வழங்கப்படும் சேவையுடன் சேர்க்கப்படுகிறது. ஓய்வூதியத்திற்கான தகுதியைத் தீர்மானிக்க இவ்வாறு செய்யப்படுகின்றது.
இந்திய தொழிலாளர்களை சமமாக நடத்த வழிவகை:
ஊழியர் பணிபுரியும் எஸ்எஸ்எ நாடு அந்நாட்டு ஊழியர்களை நடத்தும் அதே வகையில் இந்திய தொழிலாளர்களையும் நடத்த வேண்டும்.
ஓய்வூதிய நிதி அமைப்பு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து ட்வீட் செய்துள்ளது.
இபிஎஃப்ஓ என்பது வாடிக்கையாளர்களின் அடிப்படையிலும், நிதி பரிவர்த்தனைகளின் அடிப்படையிலும் உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளதாக அதன் இணையதளத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. தற்சமயம் அதன் உறுப்பினர்களுக்குரிய 24.77 கோடி கணக்குகளை (ஆண்டு அறிக்கை 2019-20) பராமரித்து வருகிறது.
மேலும் படிக்க | EPFO Alert: இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள், எச்சரிக்கும் இபிஎஃப்ஒ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ