உங்கள் அழகான முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் உள்ளதா? உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை மறைக்க நிறைய கிளென்ஸர் மற்றும் ஃபவுண்டேஷன் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதா... ஆம் எனில், கவலைப்பட வேண்டாம். இன்று இந்த கட்டுரையில் அத்தகைய பயனுள்ள முக மாஸ்க் பற்றி அறிந்து கொள்ளலாம்.. இது உங்கள் சருமத்தை இளமையாகவும் அழகாகவும் மாற்றும். மேலும் ரசாயன பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளில் ரிருந்தும் தப்பலாம். ஏறக்குறைய ஒவ்வொரு பெண்ணும் தனது சருமம், பளபளப்பானதாகவும், களங்கமற்றதாகவும், சுருக்கங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். ஆனால் இன்றைய காலகட்டத்தில், சிறு வயதிலேயே இதுபோன்ற பிரச்சனைகளை மக்கள் சந்திக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது, முகப்பரு, முதுமை, மெலஸ்மா, ஹார்மோன் மாற்றங்கள், காயம் அல்லது ஏதேனும் அதிர்ச்சி போன்ற பல்வேறு காரணங்கள் இந்தப் பிரச்சனைக்கு இருக்கலாம். அதோடு தற்போதைய உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையும் ஒரு காரணம். முக சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க முகத்தில் எந்த ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம் 


வேப்பிலை மாஸ்க் முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை நீக்குகிறது


சுருக்கம் இல்லாத, தெளிவான, களங்கமற்ற சருமத்தை நீங்கள் விரும்பினால், வேப்பபிலை கொண்டு தயாரிக்கப்பட்ட பேஸ் மாஸ்க் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். ஆயுர்வேதத்தில் வேம்புக்கு தனி முக்கியத்துவம் உண்டு. இது சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொண்டுள்ளது. இது முகத்தில் உள்ள முகப்பருவைக் குறைக்கும். மேலும் பல வழிகளில் சரும தொற்றுகளை குறைக்கலாம். வேப்பிலையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உங்கள் சரும செல்கள் சேதமடைவதைத் தடுக்கும். மேலும், இது மெலனின் உருவாவதைத் தடுக்கும். வேப்பபிலை கொண்டு தயார் செய்த ஃபேஸ் பேக்குகளை தவறாமல் தடவி வந்தால் சில வாரங்களில் நல்ல பலன் கிடைக்கும். இந்த ஸ்பெஷல் ஃபேஸ் பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போமா?


மேலும் படிக்க | முகச்சுருக்கம் முற்றிலும் நீங்கி பொலிவு பெற... சூப்பரான சில வீட்டு வைத்தியங்கள்!


தேவையான பொருட்கள்


வேப்ப இலை - ½ கப்
தண்ணீர் - 1 முதல் 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்


வேப்பிலை ஃபேஸ் பேக்கை தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை


1. வேப்ப இலை மற்றும் தண்ணீர்   சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


2. இப்போது தயார் செய்துள்ள இந்த பேஸ்ட்டில் சிறிது மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவவும்.


3. சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை உலர விடவும்.


4. பின்னர் உங்கள் முகத்தை சாதாரண நீரில் கழுவவும்.


சரும பிரச்சனைகள் நீங்கும்


இந்த பயனுள்ள ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை தடவினால் உங்கள் சரும பிரச்சனைகள் அனைத்திலிருந்தும் விடுபடலாம். முகத்தில் உள்ள கருவளையம் மற்றும் சுருக்கங்கள் பிரச்சனையை குறைக்க இந்த செய்முறையை முயற்சி செய்யலாம். இருப்பினும், வேப்பபிலை காரணமாக உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை புகார் இருந்தால், இந்த சூழ்நிலையில், நிச்சயமாக ஒரு நிபுணரின் உதவியை எடுத்துக் கொள்ளுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | முக சருமம் தளர்ந்து விட்டதா... வீட்டில் தயாரிக்கும்‘இந்த’ டோனர் கை கொடுக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ