'கோல்டன் விசா' என்பது வெளிநாட்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு அரசு வழங்கும் ஒரு கௌரவம். தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள்,  அறிவியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள்,  திறன்மிக்க மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள், சேவை துறையில் உள்ளவர்கள் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கி  ஐக்கிய அரபு அமீரக அரசு கவுரவிக்கிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோல்டன் விசா என்பது 10 ஆண்டுகாலம் செல்லுபடி ஆகக் கூடிய விசா. இதன் மூலம் ரெசிடென்ஸ் விசாவும் பெறலாம். 10 ஆண்டுகாலம் முடிந்த பின்னர் இதனை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்.


இந்நிலையில், கொரோனா பரவல் சமயத்தில் மட்டுமல்லாது, பல்வேறு கால கட்டங்களில் சமூக சேவைகளில் ஈடுபட்டவர்களை கவுரவிக்கும் வகையில்,  மனித நேயத்திற்கான கொல்ல்டன் விசாவை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக் கரையை சேர்ந்த ஹமீது யாசினுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ளது.  மனி நேயத்திற்கான விசா முதன் முதலாக வழங்கப்படும் நிலையில், இந்த விசாவைப் பெரும் முதல் தமிழர் என்ற பெரும்மையை பெறுகிறார். 


தமிழ் நடிகை த்ரிஷா,  நடிகர் கமலஹாசன், பார்த்திபன் ஆகியோருக்கு கோல்டன் விசா கிடைத்துள்ளது.  அது மட்டுமல்ல இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின், பாடகி சித்ரா ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது.


மேலும் படிக்க | UAE: தொழிலாளர் ஊதிய பிரச்சனைகளை தீர்க்க மனித வள மேம்பாட்டு அமைச்சக தலைமையில் குழு


முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தில், கேரளா போர்டு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஒரு இந்தியப் பள்ளி உயர்நிலைத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ள அபுதாபியில் உள்ள மாடல் பள்ளியின் 49 மாணவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவிற்கு இப்போது தகுதி பெற்றனர்.


மேலும் படிக்க | இந்தியாவுக்கான பயணத்தடையை நீக்கியது சவூதி அரேபியா 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR