NRI பான் - ஆதார் இணைக்க வேண்டுமா? இவர்களுக்கு விலக்கு உள்ளதா?
PAN Aadhaar Linking for NRI: வெளிநாடு வாழ் இந்தியர்களும் பான் மற்றும் ஆதாரை இணைக்க வேண்டுமா? இதற்கான செயல்முறை என்ன?
நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (பான் எண்) ஆதார் இணைக்கப்படுவதற்கான காலக்கெடு ஜூன் 30, 2023 ஆகும். இந்த காலக்கெடுவை சமீபத்தில்தான் அரசாங்கம் நீட்டித்தது. இந்த காலக்கெடுவுக்குள் பான் ஆதாரை இணைக்காவிட்டால். பான் செயலிழந்துவிடும். பான் இல்லாமல், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது, என்எஸ்இ, பிஎஸ்இ ஆகிய பங்குச்சந்தை பரிவர்த்தனைகளில் ஈடுபட முடியாது. இவை மட்டுமல்லாமல் பல நிதிச் சேவைகளை செய்ய முடியாது.
ஆதார் மற்றும் பான் இணைக்கும் தேவையிலிருந்து சில வகை தனிநபர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரித் துறையின் போர்ட்டலின் படி, பின்வரும் வகைகளில் வரும் தனிநபர்களுக்கு ஆதார்-பான் இணைப்பு கட்டாயமில்லை:
- வருமான வரிச் சட்டம் 1961ன் படி வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ-கள்).
- அசாம் மற்றும் மேகாலயா மாநில மக்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசிப்பவர்கள்.
- முந்தைய ஆண்டின் படி 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்.
- இந்தியாவின் குடிமக்கள் அல்லாத நபர்கள்
வருமான வரிச் சட்டத்தின் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பான் மற்றும் ஆதாரை இணைக்கலாம், ஆனால் அவர்களுக்கு அது கட்டாயமில்லை. இருப்பினும், ஒரு என்ஆர்ஐ தனது பான் மற்றும் ஆதாரை இணைக்கவில்லை என்றால், அவர்கள் ஆன்லைனில் வருமான வரி போர்ட்டலில், தங்களுடைய குடியிருப்பு நிலையை என்ஆர்ஐ -யாக புதுப்பிக்க வேண்டும். குடியிருப்பின் நிலை குறித்து வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படாமலும், பான்-ஆதார் இணைக்கப்படாமலும் இருந்தால், பான் எண் செயல்படாமல் போகலாம்.
மீதமுள்ள வரி செலுத்துவோருக்கு, ஆதார்-பான் இணைப்பு கட்டாயமாகும். பான்-ஆதார் இணைப்பு காலக்கெடுவை ஜூன் 30 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு அரசாங்கம் நீட்டித்துள்ளது. ஆதார்-பான் வைத்திருக்கும் அனைவரும் வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் அவற்றை இணைக்கலாம்.
முன்னதாக, காலக்கெடு மார்ச் 31, 2023 அன்று முடிவடையும் என நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, தாமதக் கட்டணமான 500 ரூபாயுடன், வருமான வரித் துறை இந்த காலக்கெடுவை மூன்று மாதங்களுக்கு நீட்டித்தது. இது 1,000 ரூபாய் அபராதத்துடன் மார்ச் 31, 2023 வரை மேலும் நீட்டிக்கப்பட்டது. .
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, ஒரு தனிநபரின் பான் செயலிழந்தால், வருமான வரிச் சட்டத்தின் கீழ் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அவர் அல்லது அவள் பொறுப்பாவார்கள். இதனால் அந்த நபர்கள் பல தாக்கங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
வருமான வரி சட்டத்தின் விதிகள், குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர, அனைத்து தனிநபர்களுக்கும் ஆதார் பான் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது.
மேலும் படிக்க | அபுதாபியில் புதிய விசா ஸ்க்ரீனிங் மையம் திறக்கப்பட்டது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ