அடையாளம், தேசியம், சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபெடரல் அத்தாரிட்டி மூலம் கோல்டன் ரெசிடென்சி விசாவைப் பெறுவதற்கான புதிய விரிவான சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'ஒன் டச் கோல்டன் விசா சேவை' என்பது இந்த விசாவுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு கோல்டன் விசாவைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. விசாவுக்கான விண்ணப்பங்கள், பிற விசாக்களை வழங்குதல், விசா ஸ்டேட்டசை முறைப்படுத்துதல் மற்றும் வதிவிட மற்றும் ஐடெண்டிடி - இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் புதுப்பிக்கும் வாய்ப்பும் உள்ளது.


ஒரு நபர் கோல்டன் விசாவிற்கான குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்தால், ICP இணையதளத்தில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தி அவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். ICP இன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த வசதி இதற்கு தகுதியுடையவர்களை இணையதளம் அல்லது ஸ்மார்ட் அப்ளிகேஷன் UAEICP மூலம் விண்ணப்பிக்க ஊக்குவிக்கிறது.


மேலும் படிக்க | NRI பான் - ஆதார் இணைக்க வேண்டுமா? இவர்களுக்கு விலக்கு உள்ளதா?


பல வித துறைகளில் திறன் படைத்த, சாதனை படைத்த வெளிநாட்டு மக்கள்,  ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்யவும் அல்லது படிக்கவும் உதவுகிறது. இது தவிர கோல்டன் விசா உள்ளவர்கள் சில பிரத்யேக பலன்களையும் பெறமுடியும். ஸ்பான்சர் தேவையில்லாத சலுகை, ஆறு மாதங்களுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வெளியே வெளியே தங்கியிருந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலை ஆகியவை இவற்றில் சில பலன்களாகும்.



இந்த பெருமைக்குரிய கோல்டன் விசாவைப் பெறுவதற்கான குறைந்தபட்ச மாதச் சம்பளத் தேவையும் சமீபத்தில் Dh50,000 இலிருந்து Dh30,000 ஆகக் குறைக்கப்பட்டது. மேலும் பல திறமையான வல்லுநர்கள் நீண்ட கால வதிவிடத்தைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர். இதற்கான பொருத்தமான துறைகளில் மருத்துவம், அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் நிர்வாகம், கல்வி, சட்டம், கலாச்சாரம் மற்றும் சமூக அறிவியல் ஆகியவை அடங்கும்.


ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரையில், அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்குகிறது. 


மேலும் படிக்க | இந்த நாட்டு மக்கள் ஓமனுக்கு செல்ல விசா தேவை இல்லை: முழு பட்டியல் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ