Srilanka Crisis: அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள பிரதமர் ராஜபக்ஷ பரிந்துரை
மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற, பொறுப்பு மிக்க நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யோசனை கூறியுள்ளார்.
கொழும்பு: இலங்கையின் பொருளாதாரத்தை கையாள்வது தொடர்பாக அரசுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பொறுப்பு வாய்ந்த நிர்வாகத்தை உருவாக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்மொழிந்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமை (ஏப்ரல் 18, 2022) வெளியிட்ட அறிக்கையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தை அமைச்சரவையில் முன்வைக்க மஹிந்த ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
"நிர்வாகம், நீதித்துறை மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் அமைச்சரவைக்கு பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அரசு நடத்தும் டெய்லி நியூஸ் செய்தித்தாள் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
மக்களுக்கு பதில் கூறும் வகையில், பொறுப்பு மிக நிர்வாகத்தை பல்வேறு தரப்பிலிருந்தும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட அரசியலமைப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என தான் நம்புவதாக பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
1948 ஆம் ஆண்டும் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து, இலங்கை, இது வரை இல்லாத வகையில்ம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறையின் காரணமாக, நாட்டின் பிரதான உணவுகள் மற்றும் எரிபொருளின் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாத நிலையில், கடும் தட்டுபாடு உருவாகி, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது.
மேலும், 2020 ஆம் ஆண்டில் இரசாயன உரங்களை தடை செய்தல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடாதது போன்ற தவறுகள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்ததாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, திங்கட்கிழமை ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரான அதிபர் கோத்தபய ராஜபக்ஷவும், சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) முன்னதாகவே நிதி உதவி பெற தனது அரசாங்கம் அணுகியிருக்க வேண்டும்; போகாதது தவறு தான் என ஒப்புக் கொண்டார்.
புதிதாகப் பதவியேற்றுள்ள தனது அமைச்சரவை அமைச்சர்களிடம் உரையாற்றிய அதிபர், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க இரசாயன உரங்களைத் தடை செய்வதற்கான தனது தீர்மானம் "தவறு" என்றும், அதற்கான திருத்த நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த தடை காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று விவசாயிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும், அரசாங்கம் பிடிவாதமாக தடையை அமல்படுத்தியது.
தற்போது நடைபெற்று வரும் பொதுமக்கள் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த அதிபர் ராஜபக்ஷ, "மக்களின் கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது" என்றார்.
இலங்கையில், பங்குச் சந்தையும் திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமை நான்கரை மணி நேரம் மின்வெட்டு இருக்கும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசின் எண்ணெய் நிறுவனம் ஒரு மாதத்தில் இரண்டாவது நாளாக திங்கட்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை மேலும் உயர்த்தியுள்ளது.
மேலும் படிக்க | பணக்காரனா நீ? வரி கட்டு! செல்வந்தர்களுக்கு வரி விதிக்கும் இலங்கை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR