UAE: ஆன்லைனில் போதைப் பொருளை வாங்கினால் சிறை செல்ல நேரிடும்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆன்லைனில் போதை பொருட்களை வாங்குவதன் காரணமாக நிதி பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
UAE: ஆன்லைனில் போதைப் பொருளை வாங்கினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் தவிர, வாங்குபவர்கள் வங்கி நிதி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்படுகிறது
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆன்லைனில் போதை பொருட்களை வாங்குவதன் காரணமாக நிதி பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
முதல் முறை தவறிழைத்த குற்றவாளிகளுக்குச் தண்டனை கொடுப்பதற்கு பதிலாக புனர்வாழ்வு கொண்டுப்பதில் கவனம் செலுத்தும், வகயில் சட்டம் மென்மையாக இருந்தாலும், ஆன் லைனில் போதை பொருள் வாங்கி தண்டனை பெற்றவர்கள் தாங்களாகவோ அல்லது பிறர் மூலமாகவோ மற்றவர்களுக்குப் பணத்தை மாற்றவும் டெபாசிட் செய்யவும் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை சட்ட வல்லுநர்கள் விளக்கினர்.
கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டின் புதிய ஆணை எண். 30, 1994 ஆம் ஆண்டின் ஃபெடரல் சட்ட எண். 14 இல் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் மீதான முக்கிய திருத்தங்களைக் கொண்டு வந்தது.
மேலும் படிக்க | UAE: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு; உம் அல் குவைனில் புதிய வேக கண்காணிப்பு ரேடார்கள்
துபாய் முதல்நிலை நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த வழக்கில், போதைப்பொருள் விற்பனையாளரிடமிருந்து ஆன்லைனில் போதைப்பொருள் வாங்கிய ஒரு பிரதிவாதிக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனையை அனுபவித்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பணத்தை டெபாசிட் செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரதிவாதிக்கு ஒரு விசித்திரமான எண்ணிலிருந்து போதைப்பொருள் விற்பனை செய்வதாக வாட்ஸ்அப் செய்தி வந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு ஹாஷிஷ் என்னும் போதை மருந்தை ஆர்டர் செய்தார்.
பிரதிவாதி பணத்தை போதைப்பொருள் வியாபாரி கொடுத்த வங்கிக் கணக்கிற்கு மாற்றிய பின் துபாயில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இருப்பிடத்திற்கு அவருக்கு அனுப்பினார்.
போதைப் பொருள் கண்காணிப்பாளர்களிடம் இருந்து தப்ப போதைப்பொருள் விற்பனையாளர்கள் இந்த புதிய உத்தியை கையாளவதாக வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டார். இருப்பினும், ஆன்லைனில் போதைப்பொருள் விற்பனை செய்வது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது.
மேலும் படிக்க | அபுதாபி வாழ் தமிழர்களே அலர்ட்: இன்று முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை
போதைப்பொருள் உட்கொள்வதற்காக யாரேனும் ஒருவர் தாமாகவோ அல்லது பிறர் மூலமாகவோ பணத்தை மாற்றினால் சிறைத்தண்டனை மற்றும் 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று சட்டத்தின் பிரிவு 64 கூறுகிறது.
“ஆன்லைனில் போதைப்பொருள்களைப் பெறுவது எளிதான அல்லது புத்திசாலித்தனமான வழி என சிலர் கருதுகின்றனர்.போலீசார் தங்களைப் பிடிக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றனர். ஆனால் சட்ட அமலாக்கம் துறை சிறப்பாக செயல்பட்டி கண்டறிந்து விடும் ”என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், சட்டப்பிரிவு 74 குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு, நிதி பரிவர்த்தனை கட்டுபாட்டு விதிப்பதோடு மட்டுமல்லாமல், சிறை தண்டனை மற்றும் 50,000 திர்ஹம் அபராதம் ஆகிவையும் உண்டு.
புதிய சட்டத்தின் பிரிவு 74, ஆன்லைனில் போதைப்பொருள் வாங்கும் குற்றவாளிகள் வங்கி நிதி பரிவர்த்தனைகள் மேற்கொள்ள இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறுகிறது.
சட்டவிரோத வலிநிவாரணிகள், ஹாஷிஷ் மற்றும் கிரிஸ்டல் மெத் போன்ற பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், தொலைபேசி மூலம் தகவல்கள் அனுப்படுகிறது. வாங்குவதற்கு ஒப்புக்கொண்ட பிறகு, அவர்கள் பொதுவாக தொலைதூர பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இருப்பிட விபரங்களை பகிர்ந்து கொள்வார்கள்.