அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு சூப்பர் செய்தி!! இனி, இந்த இடத்தில் சுவையான தென்னிந்திய சைவ உணவுகளை சுவைத்து மகிழலாம். பாரம்பரிய தென்னிந்திய உணவுகளை விரும்புவோருக்கு வெஜ் கார்னர் ஒரு சுவாரஸ்யமான மெனுவை வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜ்மானின் அல் ஜுர்ஃப் நகரில் உள்ள தும்பே மெடிசிட்டியில் அமைந்துள்ள தும்பே ஃபுட் கோர்ட், பல்வேறு வகையான உலகளாவிய உணவு வகைகளை வழங்குகிறது. இப்போது, ​​தும்பே விருந்தோம்பல் பிரிவின் விரிவாக்கத் திட்டங்களுக்கு ஏற்ப, உணவகங்களின் பட்டியலில் புதிய சைவ உணவகம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.


அல் ஜுர்ஃப் மற்றும் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கு இட்லி, வடை, தோசை மற்றும் பலவிதமான சுவையான சாப்பாட்டு உணவு வகைகளை வழங்குவதை இந்த உணவகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


மேலும் படிக்க | வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு சேவைகளை தொடங்கும் SIB வங்கி


ஹாஸ்பிடாலிட்டி, தும்பே குழுமத்தின் இயக்குநர் ஃபர்ஹாத் சி, "வெஜ் கார்னர் உணவகத்தைத் திறப்பது எங்கள் மூலோபாய முடிவின் ஒரு பகுதியாகும். மேலும் மாணவர்கள், நோயாளிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என பலவகையான மக்கள் இங்கு வருகிறார்கள். அவர்களுக்கு ருசியான, பலவகையான உணவுகளை வழங்கும் ஒரு முழுமையான இடமாக நாங்கள் மாற விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.


தும்பே ஃபுட் கோர்ட் ஒரு அற்புதமான சூழ்நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இது விசாலமான இருக்கை வசதிகள் மற்றும் வசதியான உட்புறங்களால் நிரப்பப்பட்டுள்ளது. கல்ஃப் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்கள் மற்றும் தும்பை பல்கலைக்கழக மருத்துவமனை ஊழியர்களுக்கு பயனளிக்கும் லைவ் அண்ட் லேர்ன் கருத்துக்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த வளாகத்தில் ஆறு உணவகங்கள் உள்ளன. இவற்றில் இந்திய, அரபு, சீன மற்றும் கான்டினென்டல் உணவு வகைகள் கிடைக்கின்றன. மேலும் தும்பை மெடிசிட்டிக்கு வரும் கிட்டத்தட்ட 15,000 பேருக்கு இது சுவையான உணவை அளிக்கின்றது. 


இந்த ஃபுட் கோர்ட்டில் விஐபி சாப்பாட்டு பகுதி மற்றும் பார்ட்டி ஹால் உள்ளன. பார்ட்டிகள், லெக்சர்கள் மற்றும் வணிகக் கூட்டங்களுக்கான ப்ரொஜெச்க்‌ஷன் அமைப்புகளும் இங்கு உள்ளன. பல்வேறு ஆன்லைன் டெலிவரி தளங்களான தாலாபாத், ஸொமேடோ மற்றும் பேபை ஆகியவற்றிலும் இந்த ஃபுட் கோர்ட் பட்டியலிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | துபாய் தமிழர்களுக்கு சூப்பர் செய்தி: 90% தள்ளுபடியுடன் DSS சேல் துவக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR