ஐக்கிய அரபு அமீரக  அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஹெச்.எச்.ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இரு நாட்களுக்கு முன் மறைந்தார்.  பல்வேறு நெருக்கடியான நேரத்தில் நாட்டை திறம்பட வழி நடத்திய அவர்,  கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக பதவி வகித்து வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு நாட்களுக்கு முன்பு மறைந்த ஐக்கிய அரபு அமீரக  அதிபருக்கு இந்தியாவின்  சார்பாக அஞ்சலி செலுத்த துணைக் குடியரசுத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு  அபுதாபி சென்றடைந்தார்.


அபுதாபியில் உள்ள முஷ்ரிப் அரண்மனையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர்  ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிற அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும்  பிரமுகர்களை சந்தித்த திரு  நாயுடு, சிறந்த உலகத் தலைவராகவும் இந்தியாவின் உண்மையான நண்பராக இருந்த மறைந்த அதிபரின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். அவரது மறைவு ஐக்கிய அரபு அமீரகத்தில்  உள்ள இந்திய சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அவர் திரு.வெங்கய்ய நாயுடு கூறினார்.


மேலும் படிக்க | UAE புதிய அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து


சந்திப்பின்போது,  ஐக்கிய அரபு அமீரகத்தின்  அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹெச்.எச்.ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு குடியரசு துணைத்தலைவர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். புதிய அதிபரின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்தியா- ஐக்கிய  அரபு அமீரக இடையிலான உறவும் ஒத்துழைப்பும் தொடர்ந்து மேம்பாடு  புதிய உயரங்களை எட்டும் என்று வெங்கய்ய நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 2022, மே, 14 சனிக்கிழமை ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என இந்தியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2014-ம் ஆண்டில் மறைந்த ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அதன்பிறகு அவர் பொதுநிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபா மறைவு: இந்தியா ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR