அமெரிக்க விசாக்களுக்கான அப்பாயிண்ட்மெண்ட் காத்திருப்பு நேரங்கள் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், பலருக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகள் சிக்கலில் உள்ளன. கொரோனா வைரஸ் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், அமெரிக்க விசாக்களுக்கான விண்ணப்பங்களில் பெரும் ஏற்றம் கண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் முறையாக விசா விண்ணப்பிப்பவர்களுக்கான நீண்ட காத்திருப்பு காலம் குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் முதல் முறையாக B1/B2 விசா விண்ணப்பதாரர்களின் காத்திருப்பு காலம் கடந்த ஆண்டு அக்டோபரில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இருந்தது. மாணவர் விசாவிற்கான (F-1) காத்திருப்பு காலம் சுமார் 90 நாட்கள் என்ற நிலையில் இருந்தாலும், வணிக மற்றும் சுற்றுலா விசாக்களுக்கான (B-1, B-2) காத்திருப்பு காலங்கள் அதிகமாக உள்ளன. இது நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான தூதரகங்களில், காத்திருப்பு காலம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் என்ற கால அளவை எட்டுகிறது.


தூதரக அதிகாரிகளை நாட்டிற்கு அனுப்புவது மற்றும் இந்திய விசா விண்ணப்பதாரர்களுக்கு ஜெர்மனி மற்றும் தாய்லாந்து போன்ற தொலைதூரத்தில் உள்ள மற்ற வெளிநாட்டு தூதரகங்களை திறப்பது உட்பட, இந்தியாவில் நீண்ட விசா காத்திருப்பு நேரத்தை நீக்குவதற்கு அமெரிக்கா அனைத்து விதமான சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக விசா சேவைகளுக்கான துணை செயலாளர் ஜூலி ஸ்டஃப்ட் ஒரு பேட்டியில் கூறினார்.


இந்நிலையில், நீண்ட காத்திருக்க முடியாதவர்களுக்கு, மூன்றாம் நாட்டு தேசிய (TCN) விசா செயலாக்கம் உங்களுக்கு உதவும். மூன்றாம் நாட்டு தேசிய விசா என்பது உங்கள் சொந்த நாட்டைத் தவிர வேறு நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து பெறப்பட்ட விசா விண்ணப்பம் அல்லது விசா ஆகும்.


"பல விசாக்களுக்கு மூன்றாம் நாட்டிலிருந்து விண்ணப்பிப்பது ஒரு நல்ல யோசனையாகும். இது மூன்றாம் நாட்டு தேசிய செயலாக்கம் என்று அழைக்கப்படுகிறது, தற்போது வேலை விசாக்களுக்கு TCN முறையில் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறது," என்கிறார் immigration.com தளத்தின் நிர்வாகப் பங்குதாரரான ராஜீவ் எஸ் கன்னா. இதில் உள்ள மிகப்பெரிய நன்மை என்னவென்றால், விசா நியமனங்கள் இந்தியாவை விட எளிதாகக் கிடைக்கலாம்.


மேலும் படிக்க | NRI இந்தியாவில் வீட்டு கடன் பெறுவது எப்படி? முழு செயல்முறை இதோ


எனினும், LawQuest இன் நிர்வாகக் கூட்டாளியான பூர்வி சோத்தானி, TCN வழிமுறையில் உள்ள சவால்களை பற்றி குறிப்பிடுகிறார். முதலாவதாக, இந்தியாவிற்கு வெளியே உள்ள உள்ளூர் அதிகாரிகளுக்கு இந்திய கலாச்சாரம் மற்றும் நடைமுறைகள் பற்றி அதிக தெரிந்திருப்பதில்லை. எனவே புலம்பெயர்ந்தோர் அல்லாத நோக்கத்தை அவர்களுக்கு புரிய வைப்பது ஒரு சவாலாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.


மேலும், இந்தியாவில் உள்ள கணினியில் விண்ணப்ப போர்ட்ஃபோலியோக்களை ரத்து செய்வது, வெளிநாட்டில் புதிதாக ஒன்றை உருவாக்குவது மற்றும் வெளிநாட்டில் விசா கட்டணம் செலுத்துவது போன்ற நடைமுறை சிக்கல்களும் சவாலானவை என கூறப்படுகிறது


மூன்றாவதாக, விண்ணப்பதாரர் தங்கள் விசா வைத்திருக்கும் நாடுகளையோ அல்லது இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் நாடுகளையோ அல்லது வருகையின் போது விசா வழங்கும் நாடுகளை மட்டுமே கருத்தில் கொள்ள முடியும். முன்னதாக விசா மறுக்கப்பட்டவர்கள், குற்றப் பதிவுகள் மற்றும்/அல்லது மிகவும் பலவீனமான நிதிப் பின்னணியைக் கொண்ட விண்ணப்பதாரர்கள், TCN ஆப்ஷன் மூலம் விசா பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என சோத்தானி எச்சரிக்கிறார்.


எச்-1பி மற்றும் தொழில் நுட்பத் துறையில் உள்ள பல திறமையான வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலை விசாக்களைப் பெறுபவர்களில் இந்தியர்கள் பெரும் பகுதியினர். கடந்த ஆண்டு அதிக மாணவர் விசாக்களைப் பெற்ற சாதனையை இந்தியா முறியடித்தது. அமெரிக்காவிற்கு வரும் சர்வதேச மாணவர்களின் அடிப்படையில் இந்தியா இப்போது உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று சோத்தானி கூறினார்.


மேலும் படிக்க | NRI Awards: அந்நிய மண்ணில் சாதித்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு விருது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ