ரஜினியின் காலா படம் ரிலீஸ் தொடர்பாக படக்குழுவின் அதிகாரப்பூர்வ தகவல்!
ரஜினியின் காலா படம் ரிலீஸ் தொடர்பாக ஊடகங்களில் எழும் எந்த சர்சைக்கும் நாங்கள் பொறுப்பல்ல. என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் காலா படம் ரிலீஸ் தொடர்பாக ஊடகங்களில் எழும் எந்த சர்சைக்கும் நாங்கள் பொறுப்பல்ல. என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ரஜினியுடன், ஹுமா குரேசி, நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27-ம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
அதன்படி 'காலா' படத்தின் டீசர் காட்சிகள் கடந்த மார்ச் 2-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் காலா ரிலீஸ் தாமதமாக வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி பல சர்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக அந்நிறுவனம் (LycaProductions) தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:- காலா படம் வெளியீட்டு தேதி பற்றிய எவருக்கும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
காலா படம் ரிலீஸ் தொடர்பாக ஊடகங்களில் எழும் எந்த சர்சைக்கும் நாங்கள் பொறுப்பல்ல. என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளனர்.