ஒன்றிணைந்த எதிர் கட்சிகள் பாஜக-வை வென்றது -ராகுல்!
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடன் பேசினார்!
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடன் பேசினார்!
இச்சந்திப்பின் போது அவர் தெரிவித்ததாவது...
மோடியின் ஊழல் திட்டத்தினை கர்நாடகாவில் செயல்படுத்தாமல், எடியூரப்பா மோடியின் கனவினை கலைக்க நேர்ந்துள்ளது.
மக்களை மட்டும் பாஜக அவமதிக்க வில்லை, தேசிய கீதத்தினையும் அவமதித்துள்ளனர்.
எதிர் கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து பாஜக-விற்கு எதிராக நின்றதில் நான் பெருமை கொள்கின்றேன்.
MLA-க்கை விலைக்கும் வாங்கும் மோடியின் அதிகாரத்தினை கர்நாட்டக மக்கள் நேரடியாகவே பார்த்துவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் அதிரடியால் கர்நாட்டகாவில் மக்களாட்சி மலரும். என தெரிவித்துள்ளார்.
#KarnatakaFloorTest...
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில், 222 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றதில், அதிகபட்சமாக பாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு 78 இடங்களும், மஜதவுக்கு 37 இடங்களும் கிடைத்தன.
தேர்தலுக்கு பிறகு 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால் தனிப்பட்ட முறையில் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக-வை ஆட்சி அமைக்க வருமாறு கர்நாடகா ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். மேலும் 15 நாள் அவகாசத்தில் பெருன்பான்மையினை நிறுபிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் பெற்றார்.
இந்த முடிவினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி இன்று மாலை 4 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்ற நிலையில் முதல்வர் எடியூரப்பா தனது பதவியினை ராஜினாமா செய்தார்!