அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சியில் 19 அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட  புதிய நிர்வாகிகள் நியமிக்கபட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அ.தி.மு.கவின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்.பியுமான  கே.சி.பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கி இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அறிவித்துள்ளனர். கட்சியின் கொளகைக்கு முரணாக செயல்பட்டதாக அவர் நீக்கப்பட்டுள்ளார் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 


தொடர்ந்து அ.தி.மு.க.வில் 19 அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பண்ருட்டி ராமச்சந்திரன், சி.பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ஜே.சி.டி.பிரபாகரன், மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், சண்முகநாதன், கோகுலஇந்திரா உள்ளிட்ட 19 பேர் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்களாகவும், கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக வைகைச் செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதையடுத்து, வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர்களாக ஆர்.எஸ்.ராஜேஷ், டி.ஜி.வெங்கடேஷ் பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  தேனி மாவட்ட செயலாளராக சையதுகான், திருச்சி மாநகர் மாவட்ட செயலராக ப.குமார் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலராக பி.சத்தியா, வேலூர் கிழக்கு மாவட்ட செயலராக சு. ரவி தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலராக வேளாண்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு  நியமிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.கவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.