2022 Maruti Suzuki Alto K10: சந்தையில் இதனுடன் போட்டியிடும் கார்கள் இவைதான்

Fri, 19 Aug 2022-6:13 pm,

மாருதி சுஸுகியின் மிகவும் பிரபலமான கார் ஆல்டோ கே10 இன் 2022 மாடல் முந்தைய மாடலை விட புதிய வடிவமைப்பு, தோற்றம், அம்சங்கள் மற்றும் பல மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கார் அடுத்த தலைமுறை K-சீரிஸ் 1.0 லிட்டர் டூயல் ஜெட், டூயல் VVT இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 49kw ஆற்றலை அளிக்கிறது மற்றும் 89Nm இன் உச்ச முறுக்குவிசையை உருவாக்குகிறது. காரின் மைலேஜ் லிட்டருக்கு 24.39-24.90 கிமீ ஆகும். இந்த காரில் 15க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

மாருதியின் 2022 ஆல்டோ கே10க்கு கொரிய வாகன நிறுவனமான ஹூண்டாய் கார் சான்ட்ரோ கடும் போட்டியை கொடுக்கும். ஹூண்டாய் சான்ட்ரோ காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4,89,700 ஆகும். இந்த காரை நீங்கள் CNG உடன் வாங்கலாம். இந்த காரில் 1.1 லிட்டர் எப்சிலான் எம்பி (பிஎஸ்6) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சமாக 50.7 kW (69 PS) / 5 500 r/min ஆற்றலையும், 99 Nm (10.1 kgm) / 4 500 r/min என்ற உச்ச முறுக்குவிசையையும் உற்பத்தி செய்கிறது. இரட்டை முன் ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல அம்சங்களை இது கொண்டுள்ளது.

2022 ஆல்டோ கே10-க்கு கடும் போட்டியை அளிக்கும் வல்லமையை ரெனால்ட்டின் கார் க்விட் கொண்டுள்ளது. இந்த கார் ஆல்டோவின் பட்ஜெட்டையும் சுற்றி உள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலை ரூ.4,64,400 லட்சமாகும். இந்த காரின் எஞ்சின் 800சிசி திறன் கொண்டது. புதிய ரெனால்ட் KWID இன்ஜின் 54PS ஆற்றலை அளிக்கிறது மற்றும் 72Nm உச்ச முறுக்குவிசையை உருவாக்குகிறது. இந்த காரில் டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் & இபிடி, சீட் பெல்ட் நினைவூட்டல் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

2022 ஆல்டோவின் 10 மாருதியின் எஸ்-பிரஸ்ஸோவுடனும் போட்டியிட வேண்டி இருக்கும். இந்த காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் (டெல்லி) விலை ரூ.4,25,000 ஆகும். இதுவும் K-சீரிஸ், 998cc இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 49 kW @ 5500 RPM மற்றும் 89 Nm @ 3500 RPM இன் உச்ச முறுக்கு சக்தியை உருவாக்குகிறது. இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் ஈபிடி, வேக எச்சரிக்கை அமைப்பு, கேபின் ஏர் ஃபில்டர் உள்ளிட்ட பல அம்சங்களையும் இந்த கார் பெற்றிருக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link