2024 ஆம் ஆண்டில் ‘இந்த’ 5 ராசிகளுக்கு திருமண யோகம்!

Mon, 27 Nov 2023-6:40 pm,

புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. ஜோதிடத்தின் அடிப்படையில் 12 ராசிகளில் ஒரு சில ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் கைகூடி வந்துள்ளது. 

ஒரு சில ராசிக்காரர்கள் ஏற்கனவே தங்களது திருமண வாழ்க்கையை தொடங்குவதற்கான வேலையில் இறங்கிவிட்டனர். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்காத வகையில் திடீரென திருமணம் கைகூட உள்ளது. அப்படி, அடுத்த வருடம் திருமண வாழ்க்கையில் இணைய உள்ள ராசிகள் யார் யார் என்பதை பார்க்கலாமா? 

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு திருமணம் கைகூடுவதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. இவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணை, இவர்களின் மனம் அறிந்து நடந்து கொள்வர். 

ரிஷபம்: பிறரின் நம்பிக்கைக்கு அடையாளமாக திகழும் ராசிக்காரர்கள் இவர்கள். இவர்களின் திருமண தேதியும் வெகு தொலைவில் இல்லை. நீடித்த அன்பு மற்றும் காதலுக்கு இவர்களுக்கு சீக்கிரமே அடித்தளம் அமையும். இவர்களின் திருமணமும் அடுத்த வருடம் இனிதே நடைபெற வாய்ப்புகள் அதிகம். 

கடகம்: இவர்களுக்கு அடுத்த வருடம் பல மகிழ்ச்சிகரமான தருணங்கள் நிகழும். தங்களது இரக்க குணத்தால் பிறரை ஈர்க்கும் திறன் கடக ராசிக்காரர்களுக்கு உண்டு. தங்களுக்காக வரும் வாழ்க்கை துணையுடன் அன்புடனும் உணர்ச்சிபூர்வமாகவும் நடந்து கொள்வர். 

துலாம்: சமநிலை மற்றும் சமாதானத்திற்கு பெயர் பெற்ற துலாம் ராசிக்காரர்களின் வாழ்விலும் திருமண காற்று வீசுகிறது. இவர்கள் இத்தனை நாட்கள் செய்த நற்பயனின் விளைவாக அடுத்த ஆண்டு திருமணம் உள்பட பல அற்புதங்கள் இவகளின் வாழ்வில் நிகழும். 

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு தாம்பத்திய பயணத்தை தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. இவர்கள் குறித்தும் இவர்களின் உறவு குறித்தும் உறுதியாக இருக்கும் ஒரு நபர், இவர்களின் வாழ்வில் நுழைய உள்ளார். தங்கள் திருமண வாழ்க்கையை நன்றாக நடத்திட மகர ராசிக்காரர்கள் பெரும் முயற்சி மேற்கொள்வர். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link