ஷாப்பிங் செய்யும்போது இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள் - பாக்கெட் காலியாகிவிடும்
ஷாப்பிங் செய்வது யாருக்கு தான் பிடிக்காது. ஆண், பெண் என இதில் பாலின வேறுபாடு எல்லாம் தேவையில்லை. ஷாப்பிங் செய்வதில் எல்லோரும் போட்டி போடுவார்கள்.
நிறைய பணம் இருந்து ஷாப்பிங் செய்யும்போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் குறைவான பணத்தில் தேவையான அனைத்தையும் வாங்குவதில் தான் திறமை இருக்கிறது. அதற்கு ஷாப்பிங் செய்யும்போது பொதுவாக செய்யக்கூடிய தவறுகளை கவனத்தில் கொண்டாலே போதும். அந்தவகையில் சில ஷாப்பிங் குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.
1. அவசரமாக வாங்க வேண்டாம் - எந்தவொரு பொருளையும் அவசரமாக வாங்க வேண்டாம். நிதானமாக யோசித்து பொருளை வாங்குவது குறித்து முடிவெடுங்கள்.
2. ஷாப்பிங் பட்டியல் அவசியம் - எந்த பொருள் இல்லை என்பதை வீட்டை விட்டு ஷாப்பிங் செல்லும் முன்பு பட்டியல் போடுங்கள். அதில் முக்கியமானது எது, அதிக முக்கியத்துவம் இல்லாதது எது என இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள். இந்த பட்டியலின் அடிப்படையில் பொருட்களை தேர்வு செய்து வாங்கவும்.
3. கவர்ச்சிக்கு அடிமையாக வேண்டாம் - மார்க்கெட்டுக்கு சென்றவுடன் அங்கு இருக்கும் கவர்ச்சி விளம்பரங்களின் அடிப்படையில் பொருட்களை வாங்காதீர்கள். உங்கள் பட்டியலின்படி மட்டுமே பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். இல்லையென்றால் உங்கள் பட்ஜெட் காலியாவதுடன் தேவையில்லாத பொருட்கள் வீட்டுக்கு வந்து சேரும். அத்தியாவசிய பொருட்களை வாங்க மாட்டீர்கள்.
4. வீட்டில் இல்லாத பொருட்களை வாங்கவும் - ஒருசிலர் அதிக ஆர்வத்தில் வீட்டில் இருக்கும் பொருளையே மீண்டும் வாங்கிவிடுவார்கள். பின்பு வருத்தப்படுவார்கள். இந்த தவறை செய்யக்கூடாது என நினைத்தால் வீட்டில் என்னென்ன பொருட்கள் உள்ளது, எவையெல்லாம் இல்லை என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
5. இப்படி பட்டியல் போட்டு நிதானமாக ஷாப்பிங் செய்தால் ஷாப்பிங் மகிழ்ச்சியாக இருக்கும். உங்களுக்கு தேவையான பொருட்களும் கிடைத்துவிடும். பணமும் மிச்சமாகும். இல்லையென்றால் வீண் செலவுகள் அதிகரித்துவிடும்.