மளிகை பொருட்களை விரைவாக டெலிவரி செய்யும் 5 நிறுவனங்கள்
டன்ஸோ :
டன்ஸோ நிறுவனமானது அருகிலுள்ள கடைகளில் இருந்து மளிகை பொருட்களை உடனடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பிரபலமான ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது மற்ற சேவையாக உணவு பொருட்களையும் டெலிவரி செய்கிறது.
பிளிங்கிட் :
பிளிங்கிட் நிறுவனம் முன்னர் குரோஃபர்ஸ் என்று அழைக்கப்பட்டது, மேலும் 10 நிமிட டெலிவரியை அறிமுகம் செய்த நிறுவனம் என்கிற பெருமையை இதுவே பெரும். மேலும் விரைவான டெலிவரியால் அதிக இதன் பணியாளர்கள் அதிக ஆபத்தில் சிக்குகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செப்டோ :
சமீபத்தில் வந்த டெலிவரி சேவை தான் இந்த செப்டோ. இது மற்ற நிறுவனங்கள் போல் விரைவாக மளிகை பொருட்களை டெலிவரி செய்வோம் என்று உத்திரவாதம் அளித்து சில மாதங்களிலேயே அதனை நிகழ்த்தியது.
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் :
ஸ்விக்கி செயலியில் உள்ள ஒரு அம்சம் தான் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆகும். இது டெலிவரி செய்யும் இடங்களை பொறுத்து 10 முதல் 20 நிமிடங்களுக்குள் மளிகை பொருட்களை டெலிவரி செய்து விடுகிறது.
பிக்பாஸ்கெட் :
அதிவிரைவாக பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ள புதிய நிறுவனம் பிக்பாஸ்கெட் ஆகும். இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வேகமாக வழங்கும் நோக்கில் நெட்வொர்க்கை மேம்படுத்தியுள்ளது.