சரும மேம்பாட்டிற்கு உதவும் 5 உணவுகள்!
குடைமிளகாயில் வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடன்ட்ஸ், மற்றும் பல மினரல்ஸ்கள் நிறைந்துள்ளன, இது சரும பராமரிப்பிற்கு உதவுகிறது. இதிலுள்ள கேப்சாய்சின் என்கிற வேதிப்பொருள் வயதான தோற்றத்தை தடுக்க உதவுகிறது.
கோழியிலுள்ள அதிகமான அமினோ அமிலங்கள் உடலில் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. கோழி இறைச்சியில் கொலாஜன் இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன, மேலும் இது மூட்டு சம்மந்தமான பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகை பழங்களில் அதிக ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளது, இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதோடு மட்டுமில்லாமல் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
பச்சை காய்கறிகளில், குறிப்பாக ஸ்பினாச் மற்றும் லெட்டியூஸ் போன்ற பச்சை கீரை வகைகள் உடலுக்கு அதிகளவில் ஊட்டச்சத்துக்களை தருகின்றன. இதில் நிறைந்துள்ள குளோரோபில் கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மீன்களில் அமினோ அமிலங்கள், ஜிங் மற்றும் காப்பர் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன, இது உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் மீனில் உள்ள நல்ல கொழுப்புகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.