வியக்க வைக்கும் வெந்தயக்கீரையின் 5 ஆரோக்கிய நன்மைகள்
குடல் பிரச்னைகள்: வெந்தயக் கீரை மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் அஜீரண சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரைப்பை பிரச்னைகள் மற்றும் குடல் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிப்பதில் வெந்தயக் கீரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வயிற்றுக்கடுப்பு மற்றும் வயிற்றுப்போக்கை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
கொழுப்பு: வெந்தயக் கீரை ரத்த கொழுப்பு அளவில் ஒரு நம்பமுடியாத வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பெருந்தமனியின் தடிமனைக் குறைக்க உதவுகிறது. இது நமது உடலில் உள்ள குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவற்றை குறைத்து உயர் அடர்த்தி கொழுப்புப்புரதத்தை அதிகரிக்கிறது.
இதயப் பிரச்னைகள்: வெந்தயத்தில் மிகவும் வலுவான ஆண்டியாக்ஸிடண்ட்கள் உள்ளன. அதனால் இதயத்தில் திடீர் ரத்தம் உறைதலுக்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
ரத்தசோகை: வெந்தயக் கீரைகள் இரும்புச்சத்துப் பொருட்களை அதிக அளவில் கொண்டு உள்ளன. இந்த இரும்புச் சத்துப் உடலில் ஏற்படும் ரத்தசோகையை வராமல் தடுப்பதோடு உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.
கண்பார்வை: வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும். மேலும் கண்பார்வைக் குறைவு நோய்கள் இருப்பவர்கள் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.