ரேஷன் கார்டு இருந்தால் பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் கடன்..! வட்டி இல்லை..!

Thu, 21 Nov 2024-9:56 am,

பெண்கள் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் பெண்களை தொழில்முனைவோராக்கும் லக்பதி திதி யோஜனா திட்டம் (Lakpati Didi Yojana Scheme). 

இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் ரேஷன் கார்டு (Ration Card) இருந்தாலே 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் வட்டியும் இல்லை. பயனாளிகளுக்கு கடன் திரும்ப செலுத்தும்போது அரசின் மானியமும் கிடைக்கும். 

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களில் (SHG) உறுப்பினராக இருக்க வேண்டும். அவர்கள் அங்கம் வகிக்கும் மகளிர் சுய உதவி குழு மூலம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.

லக்பதி திதி யோஜனா திட்டத்தில் சேர விரும்பும் பெண்கள் அரசின் மகளிர் சுய உதவிக் குழு அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு, நீங்கள் செய்ய திட்டமிட்டுள்ள தொழில் குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு எந்த தொழில் செய்வது என்ற எந்த திட்டமும் இல்லை என்றால் கூட, இந்த அலுவலகத்தில் உங்களுக்கு தொழில் குறித்த விளக்கங்களை கொடுப்பார்கள். 

அதில் உங்களுக்கு உகந்த தொழிலை தேர்வு செய்து அதற்கான உரிய பயிற்சியையும் அரசு சார்பில் பெற்ற இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மகளிர் சுய உதவிக் குழு பொறுப்பாளர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.

தேவையான ஆவணங்கள் என்னவென்றால், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் என்பதற்கான ஆணவம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். 18 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். 

இந்த வரம்புகள் எல்லாம் உங்களுக்கு பொருத்தமாக இருந்தால் நீங்கள் லக்பதி திதி யோஜனா திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். பெண்களை தொழில் முனைவோராகவும், சுயமாக வளர்ச்சி பெறுவதை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. விரும்பும் பெண்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாமல் இருக்கும் சூப்பரான திட்டம் இது. 

தமிழ்நாட்டில் இந்த திட்டத்தைப் பற்றி பொதுவாக விழிப்புணர்வு இல்லை. வட மாநிலங்களில் அதிகமானோர் இந்த திட்டத்தின் கீழ் அதிகம் பயன்பெறுகின்றனர். அதனால், கூடுதல் விவரங்களுக்கு அருகில் இருக்கும் அரசின் தொழில் ஆலோசனை மையம், மாவட்ட தொழில் மையத்துக்கு சென்று கூடுதல் விவரங்களை பெற்றுக் கொள்ளுங்கள். பெண்களை லட்சாதிபதியாக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link