ஐபிஎல்-ல் ஒரு போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 5 வீரர்கள்!

Sat, 19 Mar 2022-3:26 pm,

லாக்கி பெர்குசன்- 56

இந்தப் பட்டியலில் லாக்கி பெர்குசன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். ஃபெர்குசன் ஐபிஎல் 2021-ல் மிகச் சிறப்பாக பந்து வீசினாலும், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் தனது மேஜிக்கை வெளிப்படுத்தத் தவறிவிட்டார். ஐபிஎல் 2021 இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 4 ஓவரில் 56 ரன்களை வழங்கினார்.  சென்னை சூப்பர் கிங்ஸ் 192-3 ரன்களை எடுத்தது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து போட்டியின் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

சாம் கர்ரன்- 56

இந்தப் பட்டியலில் சாம் கர்ரன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில், சாம் கரன் தனது 4 ஓவர்களில் 56 ரன்களை விட்டுக்கொடுத்தார், மேலும் எந்த விக்கெட்டையும் எடுக்கவிலை. முதலில் பேட்டிங் செய்த KKR 171-6 ரன்களை எடுத்தது. எனினும், இறுதியில் கேகேஆர் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது.

சாம் கர்ரன்- 58

இன்னொரு முறையும் லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 220-3 ரன்களை குவித்தது.  சாம் கர்ரன் 1 விக்கெட்டை எடுத்து, அவரது 4 ஓவரில் 58 ரன்களை விட்டு கொடுத்தார்.  KKR 202 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பாட் கம்மின்ஸ்- 58

இந்த பட்டியலில் பேட் கம்மின்ஸ் 2வது இடத்தை பிடித்துள்ளார். முன்பு குறிப்பிட்ட அதே KKR vs CSK போட்டியில், பாட் கம்மின்ஸ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். தனது 4 ஓவர்களில் 58 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டுகளின்றி இருந்தார்.  இதனால் CSK 220-3 ஐ அடிக்க முடிந்தது, பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

லுங்கி என்கிடி- 62

லுங்கி என்கிடி ஐபிஎல் 2021-ன் போது ஒரு போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தவர் இடத்தில் முதலில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 4 ஓவர்களில் 62 ரன்கள் விட்டுக்கொடுத்தார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 218-4 ரன்கள் குவித்தது. பின்னர், மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link