ராஷ்மிகா மந்தனா பரிந்துரைக்கும் 6 சிந்தனையை தூண்டும் புத்தகங்கள்!!
பலரால், ‘நேஷனல் க்ரஷ்’ என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர், ஒரு புத்தக பிரியரும் கூட. இவர் பரிந்துரைக்கும் சில சிந்தனையை தூண்டும் புத்தகங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
When Breath Becomes Ai:
இந்த புத்தகத்தை பால் கலானிதி எழுதியிருக்கிறார். அவரது வாழ்க்கை அனுபவத்தை பற்றி பேசும் இந்த புத்தகம், நமக்குள் பல கேள்விகளையும் சிந்தனைகளையும் எழுப்பும் புத்தகம் ஆகும்.
Ikigai: The Japanese Secret to a Long and Happy Life:
ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகம், பல மொழிகளில் மொழிப்பெயர்கப்பட்டிருக்கிறது. வாழ்வை மகிழ்ச்சியாகவும், பயணுள்ளதாகவும் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை கூறும் புத்தகம் இது.
Tuesdays with Morrie:
மிட்ச் ஆல்பாம் எழுதியிருக்கும் புத்தகம் இது. தன் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கும் ஒருவர், வாழ்க்கை குறித்து உணர்ந்த பின்பு எழுதும் புத்தகம் இது.
The Secret :
ரோண்டா பைரின் எழுதியிருக்கும் புத்தகம் இது. வாழ்வில் நாம் அனைத்தையும் பாசிடிவாக யோசித்தால், எப்படி நம்மை சுற்றி இருக்கும் விஷயங்கள் மாறும் என்பதை காண்பிக்கும் புத்தகம் இது.
The Spy:
பிரபல எழுத்தாளர், Paulo Coelho எழுதியிருக்கும் புத்தகம், தி ஸ்பை. இதில், உளவாளி என்று தவறாக கருதி கைது செய்யப்படும் பெண்ணின் கதையை கூறுகிறது இந்த புத்தகம்.
The Little Big Things:
தி லிட்டில் பிக் திங்க்ஸ் புத்தகத்தை சுதா மூர்த்தி எழுதியிருக்கிறார். இதில், நாம் தினசரி நம் வாழ்வில் செய்யும் சிறு விஷயங்கள், எப்படிப்பட்ட பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இந்த புத்தகம் எடுத்து காட்டுகிறது.