2025-ல் உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 7 புத்தகங்கள்!

Fri, 29 Nov 2024-1:35 pm,

Start With Why புத்தகத்தை Simon Sinek எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், நாம் செய்யும்-நமக்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கு பின்னும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை உணர்த்தும்.

Essentialism புத்தகத்தை Greg McKeown எழுதியிருக்கிறார். இது, வாழ்வில் தேவையற்ற விஷயங்களை எப்படி கடந்து செல்வது, என்பதை காண்பிக்க உதவும். 

Deep Work புத்தகத்தை Cal Newport எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், ஒரு விஷயத்தில் எப்படி முழுமையாக கவனம் செலுத்தி வெற்றி பெறுவது என்பதை காண்பிக்கும். 

The Mountain Is You புத்தகத்தை Briannna Wiest எழுதியிருக்கிறார். நம்மை நாமே சில சோம்பேறித்தனமான பழக்கங்களால் கெடுத்துக்கொண்டிருப்போம். இவற்றை களைந்து, எப்படி நாம் முன்னேறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இப்புத்தகம் காண்பிக்கிறது. 

Can't Hurt Me புத்தகத்தை David Goggins எழுதியிருக்கிறார். மன உறுதி, மன வலிமை ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த புத்தகம் காட்டுகிறது. 

Think Like A Monk புத்தகத்தை Jay Shetty எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தை எழுதியவர், துறவியாக சில காலம் வாழ்ந்தார். இவரது அனுபவத்தை, இந்த புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார். இது, ஒருவருக்கு வாழ்க்கையில் மன அமைதியை பெற, சுய ஒழுக்கத்தை பின்பற்ற என்ன செய்ய வேண்டும் எனப்தை காட்டுகிறது. 

The 5 AM Club  புத்தகத்தை Robin Sharma எழுதியிருக்கிறார். மகிழ்ச்சி ஏற்பட, வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த புத்தகம் எடுத்துரைக்கிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link