மாலை வேளையில் ‘இந்த’ 7 விஷயங்களை செய்யவே கூடாது! பாரம்பரிய விதிமுறைகள்..
வடக்கு திசை நோக்கி, தலை வைத்து படுக்க கூடாது. இது, இரவில் நாம் சரியாக உறங்காமல் போவதற்கு, உடலில் கெட்ட எனர்ஜிக்கள் ஊடுருவதற்கும் வழி வகுக்குமாம்.
துளசிச்செடி உள்ளிட்ட செடிகளுக்கு மாலை வேளையில் தண்ணீர் ஊற்றக்கூடாதாம். இது, மகாலட்சுமியின் செடியாக கருதப்படுகிறது. இரவில் ஓய்வெடுக்கும் போது தண்ணீர் ஊற்றுவது அந்த தெய்வத்தின் அமைதியை கெடுப்பது போல இருக்குமாம்.
மாலை வேளையில் அதிகமாக கண்ணாடி பார்க்க கூடாதாம். கண்ணாடி வேறு உலகத்திற்கான கதவுகளாக செயல்படுமாம். இதனால், பொழுது போனவுடன் திரைப்போட்டு கண்ணாடியை மறைக்க வேண்டுமாம்.
தயிர், வெண்ணை, பால் உள்ளிட்ட பால் சம்பந்தப்பட்ட பொருட்களை இரவில் யாருக்கும் கொடுக்க கூடாதாம். இது, வீட்டில் இருக்கும் நிம்மதியை கெடுத்து விடுமாம்.
மாலையில் நகத்தை வெட்ட கூடாதாம். இது, வீட்டிற்குள் கெட்ட சக்திகளை கொண்டு வரும் என கூறப்படுகிறது. உண்மை காரணம், அந்த காலத்தில் இரவில் வெளிச்சம் குறைவாக இருக்கும். எனவே, இரவில் சாப்பிடும் போது தவறுதலாக வெட்டப்பட்ட நகங்களை நாம் மென்று விடலாம். இதனால்தான் நகத்தை வெட்டக்கூடாது என்று கூறுகின்றனர்.
பொழுது போன பின்பு, வீட்டை பெருக்குவதும் கெட்ட விஷயமாக பார்க்கப்படுகிறது.
இரவில் பூக்களை பரிப்பதைக்கூட தவிர்க்க வேண்டுமாம். அப்படி பூ பறிக்க வேண்டும் என்றால் அதை காலையில் செய்ய வேண்டுமாம்.